அகலிகைப் படலம் - 528

bookmark

கங்கை கூறுதல்

528.    

‘ஒரு மடக் கொடி ஆகி வந்து.
   “உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின். அவள்
   வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்;
   மற்று இன்றும் நீ அறிந்து.
பெருகு நல் தவம் புரிக!” என.
   வர நதி பெயர்ந்தாள்.
 
அரன்     - ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களையும் அழிப்பவன்;
எப்பொழுதும்  தன்னைச்  சரண்  புகுந்தவர்களின் துயரை அழிப்பவன்;
வரநதி - சிறந்த நதியான கங்கா தேவி.

பகீரதனது     வழிபாட்டை ஏற்றுக்   கொண்ட  கங்காதேவி இந்தக்
கங்கை   மண்ணுலகம்   வந்தால்   அதன் வேகத்தைச் சிவனால் தாங்க
முடியுமா என்பதை அறியுமாறு கேட்டாள் என்பது.               5-19