அகலிகைப் படலம் - 527
பகீரதன் சிவபிரானையும் கங்கையையும்
குறித்து நோற்றல்
527.
‘மங்கை பாகனை நோக்கி. முன்
மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்.
தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து.”நின் கருத்தினை
முடித்தும்” என்று அகன்றான்;
கங்கையைத் தொழ. காலம்
ஐயாயிரம் கழித்தான்.
மங்கை பாகன் - சிவன்; தழல் நிறக் கடவுள் - சிவன்.
பகீரதன் சிவன் அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம்
செய்தான்; சிவனும் அரசனின் கருத்துக்கு இசைந்தான்; பின்னர்க்
கங்கையை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் கிடந்தான் பகீரதன்
என்பது. 5-18
