அகலிகைப் படலம் - 526

bookmark

பிரமன் வரம் தந்து மறைதல்

526.    

‘ “மாக மா நதி புவியிடை நடக்கின்.
   மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு
   அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி. நீ
   அருந் தவம் தொடங்கு” என்று
ஏகினான். உலகு அனைத்தும் எவ்
   உயிர்களும் ஈன்றான்.
 
வேறு-  (வேற்றோர்)  -   பண்பாகு   பெயர்;   கண்ணுதல்  -
அன்மொழித்தொகை; தோகை பாகன் - சிவன்.

ஆகாய     கங்கையைத்   தாங்கும்   வல்லமை  பூமிக்கு  இல்லை;
அவ்வல்லமை    சிவனிடமே    உள்ளது;  அவனை  நோக்கித்  தவம்
செய்யுமாறு பகீரதனிடம் நான்முகன் கூறினான் என்பது.           5-17