அகலிகைப் படலம் - 525
பிரமன் , கங்காநதியால் நின் முன்னோர் நல் கதி
பெறுவர் எனல்
525.
‘ “நின் பெருந் தவம் வியந்தனம்;
நினது நீள் குரவர்.
முன்பு இறந்தனர். அருந் தவன்
முனிவின்; ஆதலினால்.
மன் பெரும் புவிஅதனில்.
வான் நதி கடிது அணுகி.
என்பு தோயுமேல். இருங் கதி
பெறுவர்” என்று இசைத்தான்.
கதி - இறந்தபின் அடையும் பதவி; வான் நதி - ஆகாய கங்கை.
‘சாம்பரான சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து
அவ்வெலும்புகள் மேல் படிய வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம்
கூறினான் என்பது. 5-16
