அகலிகைப் படலம் - 524

bookmark

பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்

524.    

‘ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி.
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி.
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப.
மூல நான்மறைக் கிழவனும் வந்து. இவை மொழிவான்:
 
சுமந்திரன் - நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.

வசிட்டனது  மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு
பகீரதன்  கடும்  தவம்  செய்தான்; அத்  தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும்
அம் மன்னன்முன் தோன்றினான் என்பது.                     5-15