அகலிகைப் படலம் - 521

bookmark

பகீரதன் தன் மூதாதையர் செய்தி வசிட்டரை வினாதல்

521.    

‘உலகம் யாவையும் பொது அறத்
   திகிரியை உருட்டி.
இலகும் மன்னவன் இருந்துழி.
   இறந்தவர் சரிதம்.
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு
   உரைத்திட. அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று.
   ஒரு மொழி செப்பும்:
 
பொது அற  -  பல  அரசர்க்குப்  பொது என்னும் தன்மை நீங்கித்
தனக்கே உரிமையாகும்படி.  

பகீரதன்  தன்  குலகுருவான வசிட்டனிடம் தன் முன்னோர் வரலாறு
கேட்டான் என்பது.                                       5-12