அகலிகைப் படலம் - 519
சகரன் வேள்வி முற்றிப் பரலோகம் செல்லல்
519.
‘பழுதிலாதவன் உரைத்த கொல்
கேட்டலும். பரிவால்
தொழுது. வாம் பரி கொணர்ந்து. அவி
சுரர்களுக்கு ஈயா.
முழுதும் வேள்வியை முற்றுவித்து.
அரசனும் முடிந்தான்-
எழுது கீர்த்தியாய்! - மைந்தனுக்கு
அரசியல் ஈந்து.
பழுது- காமம். வெகுளி. மயக்கம் என்பன; எழுது கீர்த்தி -
எழுதப்படுகின்ற புகழ்.
அம்சுமான் கொண்டுவந்த குதிரையை வைத்துச் சகரன் வேள்வியை
முடித்தான். தேவர்களுக்கு அவிசு தந்தான். பெயரனான
அம்சுமானுக்கு முடிசூட்டி இறந்தான் என்பது. 5-10
