அகலிகைப் படலம் - 517
அம்சுமான் குதிரைகொணரப் பாதலஞ்சேர்தல்
517.
‘உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்;
உணர்வு ஒழியா.
அழைத்து மைந்தன்தன் மைந்தனை.
“அவர் கழிந்தனரேல்.
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?”
என. அவன் எழுந்து.
தழைத்த மா தவக் கபிலன் வாழ்
பாதலம் சார்ந்தான்.
ஏல் - (என்னில்) எதிர்கால வினையெச்சத்திரிபு; அம்சுமான் -
சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன்.
தன் மைந்தர் அறுபதினாயிரவர் மாய்ந்தது கேட்டுச் சகரன்
வருந்தினான். அங்ஙனம் வருந்தினும் வேள்வியைச் செய்து முடிக்க
உறுதி கொண்டான் என்பது. 5-8
