அகலிகைப் படலம் - 513
வேள்விக்குதிரை மறைந்ததை அம்சுமான்
சகரனிடம் தரெிவித்தல்
513.
‘வாவு வாசிபின் சென்றனன்
அஞ்சுமான் மறுகி.
பூவில் ஓர் இடம் இன்றியே
நாடினன் புகுந்து.
தேவர் கோமகன் கரந்தமை
அறிந்திலன். திகைத்து.
மேவு தாதைதன் தாதைபால்
உரைத்தனன். மீண்டு.
வாசி - குதிரை; பூ - பூமி.
குதிரைக்குக் காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம்
தெரியவில்லை; காணாத குதிரையை அம்சுமான் பூமியெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை; தந்தை சகரனிடம் சொன்னான் என்பது.
5-4
