அகலிகைப் படலம் - 511
சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்
511.
‘விறல் கொள் வேந்தனுக்கு உரியவர்
இருவரில். விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதி
னாயிரர் வலத்தார்.
சுமதி - காசிபனுக்கு விநதையிடம் தோன்றியவள்; சுமதி -
நல்லறிவுடையவள் என்பது பொருள்.
சகரனுக்கு இரு மனைவியர். முதல் மனைவியான கேசினிக்கு ஒரு
மகன் - அசமஞ்சன்;இளையவள் சுமதிக்கு அறுபதினாயிரவர். 5-2
