அகலிகைப் படலம் - 504

bookmark

தேவரைக் கொல்லவல்ல புதல்வனைத் தருமாறு திதி
தன் கணவனை வேண்டல்

504.    

‘அந்த வேலையில் திதி பெருந்
   துயர் உழந்து அழிவாள்.
வந்து காசிபன் மலரடி
   வணங்கி. “என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால்
   இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள். அவர்தமை
   மடித்தலுக்கு” என்றாள்.
 
வேலை - காலம்; காசிபன் - திதியின் கணவன்.

அசுரர்களைக்   கொன்ற தேவர்களைப் பழிவாங்கும் பொருட்டு ஒரு
மகனைத்   தரவேண்டும்    என்று  திதி  என்பவள்  தன் கணவனிடம்
கேட்டாள் என்பது.                                        3-25