அகலிகைப் படலம் - 502

bookmark

அமிர்தத்தைத் தேவர்களே பெறுதல்

502.    

‘இறந்து நீங்கின யாவையும்.
   எம்பிரான் அருளால்.
பிறந்த; அவ்வயின் சுராசுரர்
   தங்களில் பிணங்க.
சிறந்த மோகினி மடந்தையால்.
   அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
   அமரர்கள் துய்த்தார்.
 
மோஹிநீ   -   மோகினி    (தன்னைக்கண்டவரை);   மதிமயங்கச்
செய்யும் அழகுடைய தெய்வமகள்.

கடலில்     சென்று  ஒளித்த  தெய்வலோகப்   பொருள்கள் யாவும்
மீண்டும்   தோன்றின;   அவ்வாறு  தோன்றிய  அமிர்தம் காரணமாகத்
தேவர்   அசுரர்க்குப்   பிணக்கு  உண்டாகத்  திருமால் சூழ்ச்சி செய்து
அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது.         3-23