அகலிகைப் படலம் - 501
பாற்கடலைக் கடைதற்குத் திருமால் உதவிபுரிதல்
501.
‘திறல் கொள் ஆமை ஆய்.
முதுகினில் மந்தரம் திரிய.
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள்
பரப்பி. மீ வலிப்ப.
மறன் நிலாம் முனி வெகுளியால்
மறைந்தன வரவே.
அறன் இலா மனத்து அடைகிலா
நெடுந் தகை அமைத்தான்.
மறன் இல் ஆம்- கோபத்துக்கு இடமான;மறன் நில்லா - கோபம்
மனத்தில் அடங்கி நிற்கப் பெறாத; மறன் நிலாம் - கோபம் உலாவி
விளங்குதற்கு இடமான.
திருமால் ஆமை வடிவெமடுத்துத் தன் முதுகின் மேல் மந்தர மலை
சுழலும்படி. மந்தர மலையை மேலே அழுத்தும்படி ஆயிரம்
கைகளைப் பரவச்செய்தும் நீங்கின பொருள்கள் மீண்டு வர
உதவினான் என்பது. 3-22
