அகலிகைப் படலம் - 499
தேவர்களின் மகிழ்ச்சி
499.
‘ “யாமும் அவ் வயின் வருதும்; நீர்
கதுமென எழுந்து
போமின்” என்று அருள்புரிதலும்.
இறைஞ்சினர் புகழ்ந்து.
“நாமம் இன்று” எனக் குனித்தனர்.
நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெருங் களி துளக்
குறுதலால். அமரர்.
நாமம் - அச்சம்; துளக்குறுதல் - ஆட்டுதல்; குனித்தனர் -
கூத்தாடினர்.
பாற்கடல் கடையுங்கால் தானும் துணை வருவதாகக் கூற.
அத்தேவர் மகிழ்ந்து இனித் தம் வறுமை அகலுமென்று துணிந்து
கூத்தாடினர் என்றார். 3-20
