அகலிகைப் படலம் - 497
பிரமன் முதலியோர்க்குத் திருமால் அபயமளித்தல்
497.
‘வெஞ் சொல் மா முனி வெகுளியால்
விளைந்தமை விளம்பி.
கஞ்ச நாள்மலர்க் கிழவனும்.
கடவுளர் பிறரும்.
“தஞ்சம் இல்லை; நின் சரணமே
சரண்” எனச் செப்ப.
“அஞ்சல். அஞ்சல்! என்று உரைத்தனன்.
உலகு எலாம் அளந்தோன்.
உலகெலாம் அளந்தோன்- மூவுலகங்களையும் தன் அடிகளால்
அளந்தவன் - திருமால்; தஞ்சம் - புகலிடம்.
தேவர்கள் துருவாச முனிவனது சாபத்தின் விளைவைத்
திருமாலிடம் எடுத்துச் சொல்ல. அத்திருமாலும். ‘அஞ்சாதீர்’ என்று
அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது. 3-18
