அகலிகைப் படலம் - 496
தேவர்கள் திருமாலைச் சரணடைதல்
496.
‘வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய. வானோரும்.
தையல் பாகனும். சதுமுகக் கடவுளும். கூடி.
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.
மறு- திருமாலின் மார்பில் உள்ள உத்தமக்குறி. திருமகள் பிறர்
மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் - சிவன்.
வானுலகு எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும். சிவனும்.
நான்முகனும் திருமாலை அடைந்து முறையிட்ட செய்தியைக் கூறுவது.
செல்வத்தை இழந்த தேவர்கள் அச்செல்வத்திற்குத் தலைவியான
திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார். 3-17
