அகலிகைப் படலம் - 492
துருவாசமுனிவர் இந்திரனை வெகுளுதல்
492.
‘புகை எழுந்தன. உயிர்த்தொறும்;
எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம்.
நல் நுதலில;
சிகை எழும் சுடர் விழியினன்.
அசனியும் திகைப்ப.
“மிகை எழுந்திடு சதமக!
கேள்” என வெகுண்டான்.
சதமகன்- இந்திரன் - நூறு அசுவமேத வேள்விகளைச்செய்து
இந்திர பதவி பெற்றவன்; எயில் - பட்டணம் - ஆகுபெயர்.
கோபத்தால் துருவாச முனிவனின் மூச்சில் புகை கிளம்பியது;
சிரிப்பு எழுந்தது; புருவங்கள் நெற்றியில் ஏறின என்றார். 3-12
