அகலிகைப் படலம் - 491

bookmark

துருவாசமுனிவர் சினம்

491.    

“கண்ட மா முனி விழி வழி
   ஒழுகு வெங் கனலால்.
அண்ட கூடமும் சாம்பராய்
   ஒழியும்”என்று. அழியா.
விண்டு நீங்கினர் விண்ணவர்;
   இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது;
   சுழன்றது எவ் உலகும்.
 
அதைக்கண்ட     துருவாசன்   பெருங்கோபம்  கொள்ள  வானவர்
யாவரும்   ஓடிப்போகத்  திசைகள் எங்கும் இருண்டன என்பது.  சந்திர
சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார்.             3-11