அகலிகைப் படலம் - 488
488.
‘நீல மால் வரை தவழ்தரு
கதிர் நிலாக் கற்றை
போலவே. இரு புடையினும்.
சாமரை புரள.
கோல மா மதி குறைவு அற
நிறைந்து. ஒளி குலாவி.
மேல் உயர்ந்தென
வெள்ளி தம் தனிக் குடை விளங்க.
நீல மலையின் இருப்பக்கத்தும் சஞ்சரிக்கும் நிலாக்கற்றைபோல
இந்திரனின் இரு பக்கங்களிலும் வெண் சாமரங்கள் அசையவும்.
வானத்தில் விளங்கும் முழுமதிபோல ஒற்றைக் குடை ஒளிரவும்
சென்றான் என்பது. 3-8
