அகலிகைப் படலம் - 487

bookmark

487.    

‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
   உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
   நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
   குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
   வீதிகள் நெருங்க.
 
அரம்பை     - நளகூபரனின் போகமடைந்தை;  திலோத்தமை -
பிரமனால்   படைக்கப்பட்டவள்;  ஊர்வசி  -  நாராயண  முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.

அரம்பை  முதலான   தேவதாசிகள்   நால்வரும்  பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது.             3-7