அகலிகைப் படலம் - 486
இந்திரன் பவனிகண்டு முனிவர் வியப்படைதல்
(486-489)
486.
‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
களிற்றின்மேல் விளங்க.
யானைக்கு மலை உவமை - வலிமை. பெருமை. மதநீர்
அருவியுடைமை பற்றி; ஐராவதம் - இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.
இந்திரன் ஐராவத யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல். ஐராவதத்தின் மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு. 3-6
