அகலிகைப் படலம் - 484

bookmark

484.    

“உலகம் யாவையும் படைத்து. அளித்து.
   உண்டு. உமிழ். ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து. உயிர்
   யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில்
   சூடிய தெரியல்.
அலகு இல் மா முனி! பெறுக” என
   அளித்தனள் அளியால்.
 
உலகம் யாவையும்  படைத்து. அளித்து. உண்டு உமிழ் ஒருவன்
-திருமாலின் முத்தொழில் பேசப்பெறுகின்றன.

அவ்வித்தியாதர  மகள்  தன்  யாழில்  கட்டிய  அப் பூமாலையைத்
துருவாச முனிவனுக்குக் கொடுத்தாள் என்பது.                   3-4