அகலிகைப் படலம் - 482

bookmark

வித்தியாதரமங்கை திருமகள்பால் மலர்மாலை பெறுதல்

482.    

‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
   என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
   விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
   புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
   கொடுத்தனள் மகிழ்ந்து.
 
நீள்பதம் - வைகுண்டம்.

ஒரு     வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி   மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.               3-2