வாருங்கள் புகழந்திடுவோம் தேவாதி தேவனை

bookmark

வணங்கிப் போற்றிடுவோம் ராஜாதி ராஜனை
கைகளை உயர்த்திடுவோம் சிரசினைத் தாழ்த்தி
பணிந்து வாழ்த்திடுவோம் இயேசு கிறிஸ்துவை (2)

1. வாழ்வையும் வளத்தையும் கொடுத்ததற்கு
வேந்தனை வணங்கிடுவோம் (2)
நன்றி உணர்வையும் கொடுப்பதற்கு
இறைவனை வேண்டிடுவோம் (2)

2. துன்பமும் துயரமும் வெல்வதற்கு தேவனைப் புகழ்ந்திடுவோம் (2)
பாவத்திலிருந்து மீட்படைய இறைவனைப் போற்றிடுவோம் (2)
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா - 2