மகரக்கண்ணன் வதைப் படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

மகரக்கண்ணன் வதைப் படலம்

சீதைக்கு நல் நிமித்தம் தோன்றுதலும், இராவணன் தூதுவர் நகருக்கு ஏகுதலும்

இன்று ஊதியம் உண்டு என இன்னகைபால்
சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்
வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான் -
தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய். 

தூதர் தெரிவித்த செய்தி கேட்டு இராவணன் துயருறுதல்

ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,
ஓகைப் பொருள் இன்று என, உள் அழியா,
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால்.
 
சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
வெந் நாகம் உயிர்த்தென, விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்: 

கரன் மகன் மகரக்கண்ணன் தன்னை போருக்கு அனுப்ப இராவணனை வேண்டுதல்

முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? 
 
யானே செல எண்ணுவென், ஏவுதியேல்;
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ? 
 
அருந் துயர்க் கடலுள் ஆழும் அம்மனை, அழுத கண்ணள்,
பெருந் திருக் கழித்திலாதாள், "கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்" என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி என்றான். 

இந்திரியத்தத இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? 
 
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 
 
இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்? என அமலன் சொன்னான். 
 
மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 
 
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம்.