பூரான்

பூரான்

bookmark

பூரான்

இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம்.

உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்க உறுப்புடையது. 

எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. 

தலையில் இருந்து மிக நீளமான உணர்விழைகள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). 

ஒவ்வொரு கால்களும்கூட பகுதி - பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். பொதுவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். 

பூரானின் உடல் அமைப்பில், அதன் முன்கட்டின்(முன் பகுப்பு உடலின்) கால்கள், இரையைப் பற்றி நஞ்சு ஊட்டுவதால், வாயின் தாடை போல் இயங்குகின்றது. 

இவை தன் உடலில் இருந்து ஈரப்பதத்தை இழப்பதால், இவை வாழும் இடம் ஈரப்பதம் சூழ்ந்த குறுஞ்சூழலாகவேனும் இருத்தல் வேண்டும்.