நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா (2)

bookmark

அதில் அன்பை நிறைத்து தா அனைவருக்கும் நான் அளிக்க தா

1. எனக்கெதிராய் பகைமை செய்வோரை மன்னிக்கும் மனதைத்தா (2)
அந்தப் பகைமையைத் திரும்ப நினையாமல்
நான் மறக்கும் மனதைத்தா

2. உன்னால் அடைந்த நன்மை மறவாத உள்ளம் ஒன்று தா (2)
எந்நாளும் உந்தன் நினைவாய் வாழும் உள்ளத்தை எனக்கு தா