தைலம் ஆட்டு படலம்

தைலம் ஆட்டு படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

தைலம் ஆட்டு படலம்

(தயரதன் உடலைத் தைலத்தில் மூழ்குவித்து வைத்திருந்தமையைக் கூறும் படலம் என்பது பொருள். இராமன் வனம் புகும் செய்தி கேட்டு இறந்துபோன தசரதனது உடம்பை, கேகய நாட்டுக்குச் சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் அளவும் கெடாமல் இருத்தற் பொருட்டுத் தைலத்தில் இட்டு வைத்தகைக் கூறுவதனால் தைலம் ஆட்டு படலம் எனப்பட்டது. ஆட்டுதல் நீர்ஆட்டுதல்என்பது போல அல்லாமல், தைலத்தில் இடுதல் ஆட்டுதல் எனப் பெற்றது.

நகர மாந்தர் தொடர இராமன் தேரில் வனம் சேறலும், இரவில் அனைவரும் வனத்தில் துயில் கொள்ளும்பொழுது இராமன் சுமந்திரனைத் தேருடன் நகர் திரும்பச் சொல்லுதலும், சுமந்திரன் மறுத்து வருந்த, இராமன் தேற்ற, மூவரும் கூறிய செய்திகளுடன் சுமந்திரன் தேரை அயோத்திக்குத் திருப்பிக்கொண்டு சேறலும், இரவில் மூவரும் வழிநடந்து இரண்டு யோசனை தூரம்காட்டிற்குள் சென்றுவிடலும், நகர் திரும்பிய சுமந்திரன் வசிட்டனிடம் செய்தி சொல்ல, வசிட்டன் சுமந்திரனோடு தசரதனை அணுக, தசரதன் மூர்ச்சை தெளிந்து முனிவனை வினவ, முனிவன்பேசாது அகல, சுமந்திரன் இராமன் வனம் புகுந்த செய்தி சொல்ல, தசரதன் உயிர் துறத்தலும், கோசலை, சுமித்திரை, தேவிமார் புலம்பலும், சுமந்திரனால் செய்தி அறிந்த வஷிஸ்டன் வருந்திக் கேகய நாடு சென்ற பரத சத்துருக்கனர் திரும்ப வந்து ஈமக்கடன் செய்யும் அளவும்கெடாமல் இருக்கத் தசரதனது உடலைத் தைலத்தில் இடுதலும், பரதனுக்கு ஓலை அனுப்புதலும், இராமனுடன் காடு சென்ற நகர மக்கள் காலையில் விழித்து இராமனைக் காணாது தேர்ச் சுவடு அயோத்தி செல்வது நோக்கி இராமன் அயோத்தி திரும்பியதாக மகிழ்ந்து நகர் புகுதலும், இராமன் திரும்பாமையும், தசரதன் இறப்பும் அறிந்து வருந்திய நகர மாந்தரை வஷிஸ்டன் தேற்றுதலும் ஆகிய செய்திகள் இதனுள் கூறப் பெற்றுள்ளன.)

சுமந்திரர் ரதத்தை செலுத்த அயோத்தியின் தவப் புதல்வர் உட்பட அம்மூவரும் காடு நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். அது கண்ட அயோத்தியின் மக்கள் அழுது துடித்தனர். இராமருடைய தேர், அப்போது மக்கள் பெருக்கிய கண்ணீர்க் கடலின் நடுவே செல்லும் ஓடம் போல் அமைதியாகச் சென்றது. அப்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்த சமயம். இராமபிரானின் தேர் போவதைக் கண்ட அயோத்தியை மக்களில் பலர், அதனைப் பின் தொடர்ந்து எப்படியும் இராமபிரானை மீண்டும் அயோத்தியைக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உடன் சென்று இருந்தார்கள்.

அயோத்தியைக் கடந்து அந்த ரதம் இரண்டு யோசனை தூரம் வந்து இருந்த சமயம். மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல், இருள் கவ்வியது. இராமர், சீதை , லக்ஷ்மணர் ஆகிய மூவரும் சுமந்திரருடன் அங்கு காணப்பட்ட அழகிய சோலையில் தங்கினர். இராமரை தொடர்ந்து வந்தவர்களோ, இராமபிரானை விட்டுப் பிரிய மனம் இல்லாமல், சோலையை சுற்றித் திரிந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் மனதில்," எங்கே தாங்கள் தூங்கி விட்டால் ராமன் கானகம் போய்விடுவாரோ " என்ற எண்ணம் ஓடிக் கொண்டு இருக்கவே, தங்களுக்கு வந்த நித்திரையைக் கூட பெரும்பான்மை ஆனவர்கள் அணை போட்டுத் தடுத்து வைத்து இருந்தார்கள்.ஆனால், வெகு நேரம் அவர்களால் உறங்காமல் இருக்க முடியவில்லை. நெடு தூரப் பயணம், அதிக தூரம் நடந்து வந்த களைப்பு, அதன் காரணமாக ஒருவர் பின் ஒருவராக தங்களையும் அறியாமல் நன்கு தூங்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நடு இரவு நேரத்தில் நால்வர் மட்டுமே உறங்காமல் இருந்தனர். ஆம், அவர்கள் ராமர், லக்ஷ்மணர்,சீதை மற்றும் சுமந்திரர் ஆவார்கள்.

ராம பிரான் சுமந்திரரிடம்," சுமந்திரரே இது தான் தக்க சமயம், ரதத்தை எடுத்துக் கொண்டு , ரதத்தின் சக்கரத் தடம் மண்ணில் பதியுமாறு அயோத்தியை நோக்கி விரைந்து ரதத்தை செலுத்துங்கள். நாங்கள் இந்த வழியாக கானகம் சென்று விடுகிறோம். காலையில் எழுந்த நமது அயோத்தியை மக்கள், ரதத்தின் சக்கரத் தடம் அயோத்தியை நோக்கி திரும்பி இருப்பதைக் கண்டு, நாம் நாடு திரும்பியதாக மனம் மகிழ்ந்து மீண்டும் அயோத்தியைக்கு திரும்பி விடுவார்கள்" என்றார்.

இது கேட்ட சுமந்திரர், மிகவும் துக்கம் கொண்டார். இராமரை கண்ணீர் பெருக நோக்கி " இறைவா, நீங்கள் சொல்வது சரி தான், மக்களை ஏமாற்றி விட்டு சென்றுவிடலாம். ஆனால், நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்காக அயோத்தியில் காத்துக் கொண்டு இருக்கும் மன்னரை நான் எப்படி சமாளிப்பது? அவரிடம் என்ன பதில் கூறுவது?" ஒரு கால் இராமர் நாட்டுக்குத் திரும்பி வந்தாலும் வருவார்!" என்று ஆசைப்பட்டுக் கொண்டு, நகரத்திலயே தங்கி இருக்கும் அந்த மக்களுக்கு நான் என்ன பதில் கூற? உங்கள் மூவரையும் கொடிய கானகத்தில் விட்டுக் கொடியவன் நான் மட்டும் வந்தேன் என்று கூறட்டுமா? மன்னரிடம் நான் என்ன கூற? ராமன் உட்பட மூவரும் உடன் வந்து இருக்கிறார்கள் என்று பொய் சொல்லட்டுமா? இல்லை ஸ்ரீ ராமர், சீதையும் லக்ஷ்மணனும் பின் தொடர காடு சென்று விட்டார் இனி அவர் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் தான் வரப் போகிறார் என்ற உண்மையை சொல்லட்டுமா? அப்படி சொன்னாள் அது கேட்ட சக்கரவர்த்தி தான் உயிருடன் இருப்பாரா? இல்லை, அவர் என் முன்னால் உயிர் விடுவதை எப்படி நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அப்படி நான் பார்த்துக் கொண்டு இருந்தால்,கைகேயியை விட கொடுமைக் காரனாக மாறி விட்டவன் ஆவேனே" என்றார்.

அதற்கு மேல் சுமந்திரரால் பேச முடியவில்லை. அவர் ராமபிரானின் கால்களைப் பற்றிக் கொண்டார். சுமந்திரரை தமது கரங்கள் கொண்டு அன்புடன் தூக்கினார் இராமர். பின்பு அவரிடம்," சுமந்திரரே தாங்கள் அறியாதது அல்ல. எப்பொழுது நாம் இந்த உலகத்தில் பிறந்து விட்டோமோ அப்போதே இன்பத்தையும், துன்பத்தையும் கண்டு சலனம் இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த விவேகத்தை உணர்ந்து அறிந்தவர் தாங்கள். நான் காட்டுக்கு செல்வதை நினைத்துத் தாங்கள் இப்போது வேதனை அடைகின்றீர்கள். அந்த ஒரு காரணத்துக்காகவே நான் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றீர்.அப்படி நான் செய்தால், தந்தையின் வார்த்தையை மீறிய தமையன் என்று நாடு என்னைத் தூற்றாதா? தருமப்படி நடப்பவனாக இராமன் இது வரையில் காட்டிக் கொண்டு இருந்தான். ஆனால், அவன் தருமவான் அல்லன் என்று காண்போர் சொல்லமாட்டார்களா? இப்போது நான் உம்முடன் வந்து விட்டால், தந்தையின் வாக்கை காப்பாற்ற தவறிய என்னைப் பார்த்து, என் குலத்து கதிரவன் கூட வெட்கப் படுவானே. மேலும் இப்போது நான் உங்களுடன் வந்தால் எனது தந்தைக்கும் அல்லவா இழுக்கு?. ஆதலால் , நான் சொல்வதை மட்டும் செய்வீராக " என்று கூறி முடித்தார் ராம பிரான்.

ராமனின் சொல் கேட்ட சுமந்திரர், தன்னை தேற்றிக் கொண்டு, " தங்கள் சித்தப்படியே பிரபு, ஆனால் நான் போவதற்கு முன்னால், எனக்குத் தங்களிடம் இருந்து வேறு ஏதேனும் செய்திகள் அயோத்தியில் சொல்ல உண்டா?" என்றார்.

அதற்கு ராமர்," சுமந்திரரே தாங்கள் முதலில் வசிஷ்ட முனிவரிடம் செல்வீர், அவரிடம் எனது வணக்கத்தை செலுத்துவீர். பின்னர் அவரை அழைத்து கொண்டு எனது தந்தையிடம் போவீர். முனிவரைக் கொண்டு," இராமன் காடு போகிறோமே என்று சிறிதும் வருத்தப் படவில்லை . வனவாசத்தில் தனக்கு நன்மையே ஏற்படும் என்று கருதுவதாக அவரிடம் மேலும் தெரிவியுங்கள். அது போல, என் மீது எனது தந்தை காட்டும் அந்த அன்பை, பரதனிடமும் காட்டும் படி சொல்லுங்கள். அப்படியே, சிற்றன்னை கைகேயி தேவியாரின் மேல், பழையபடி தந்தையை அன்பு செலுத்துமாறு நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

பின்பு தாயாரிடம் சென்று தந்தைக்கு உதவியாக இருக்கும் படிக் கூறுங்கள்" இதுவே நான் உங்களிடம் கொடுக்கும் செய்தி என்றார்.

பிறகு சுமந்திரர் சீதா தேவியை நோக்கினார், அவரது பார்வையின் அர்த்தத்தை அறிந்து கொண்ட சீதை அவரிடம்," சுமந்திரரே, நீர் சென்றதும் எனது வணக்கத்தை முதலில் எனது மாமனாருக்கு சொல்வீர்களாக. பின்பு, நான் வளர்த்து வந்த என் அன்புள்ள நாகணவாய்ப் பறவையையும் கிளியையும் பரிவுடன் காத்து வருவீராக. இதை என்னிடம் அன்பு வைத்திருக்கும் தங்கைகளுக்கும் சொல்வீராக !" என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுமந்திரர் அதிகத் துன்பம் அடைந்தார்." காடு செல்வதால் ஏற்படும் துன்பத்தைப் பற்றி அன்னை கவலைப் படவில்லையே. தான் நாட்டில் விட்டு வந்த பறவைகளை நினைத்து அல்லவா கவலைப் படுகிறாள்! இது என்ன குழந்தைத் தனம்?" என்று மனதுக்குள் எண்ணக் குமிழியிட அவர் மனம் வருந்தினார். அது கண்ட ராமர் சுமந்திரரிடம் தோன்றிய அந்த வருத்தத்தை, தன் வார்த்தைகள் கொண்டு தேற்றினார். ஒருவாறு ராமனின் தேற்றுதளால் மன சாந்தி அடைந்த சுமந்திரர், லக்ஷ்மணனைப் பார்த்து," தாங்கள் உங்கள் தந்தையிடம் சொல்ல வேண்டிய செய்திகள் ஏதேனும் உண்டா?" என்றார்.

லக்ஷ்மணன் அந்தக் கணம் கோபக் காரனாக மாறினான். அக்கோபம் வார்த்தைகளில் கலந்து வெளி வந்தது," சுமந்திரரே,என் அண்ணனுக்கு ராஜ்ஜியம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய தசரதரை ஒரு பொருட்டாக மதித்து செய்தி தான் சொல்ல வேண்டுமோ? அவருக்கு நான் அவசியம் ஏதேனும் செய்தி சொல்லி ஆகவேண்டும் என்றால் சொல்கிறேன். கேளும்." காட்டில் இராமபிரான் காய் கிழங்கு உண்ண, சத்தியசந்தன் என்று பேர் கொண்ட நீர் அறுசுவை உணவை உண்டு வாழ்க! " என்று நான் கூறியதாக அந்தப் பெரியவரிடம் போய்ச் சொல்லும். அத்துடன் சத்ருக்கனனிடம் "நீ அந்தக் கொடிய பரதனுடன் சேர்ந்தமைக்காக நான் இனி உன்னை தம்பியாகவே கொள்ளமாட்டேன். என்னோடு நானே தனித்துப் பிறந்து கொண்டதாக நினைத்துக் கொள்கிறேன்" என்று போய் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் சுமந்திரரே என்றான்.

லக்ஷ்மணின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இராமபிரான் அவனை கண்டித்தார். அத்துடன் லக்ஷ்மணன் சொன்ன வார்த்தைகளுக்காக சுமந்திரரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் .பிறகு சுமந்திரர் அவ்விடம் விட்டு ராமபிரான் சொன்னபடியே ரதத்தின் சக்கரத் தடம் மண்ணில் பதிய ரதத்தை ஒட்டிக் கொண்டு அயோத்தியை சென்று சேர்ந்தார்.

பிறகு சுமந்திரர் அந்தப் பக்கம் போனவுடன், இராமபிரான் ஓசைகள் ஏதும் இன்றி காட்டின் இன்னொரு பக்கமாக நிலவின் ஒளி வழிகாட்ட இரண்டு யோசனை தூரம் நடந்தார். அப்போது உதய வேளையை நெருங்கியது. பொழுதும் கொஞ்சம், கொஞ்சமாக விடியத் தொடங்கியது. காரிருள் அகன்றது.

அந்த சோலையில் உறங்கிக் கொண்டு இருந்த அயோத்தியை மக்கள் மெல்லக் கண் விழித்தனர். முதலில், இராமபிரானைக் காணாமல் பதறினர். தன்னையும் அறியாமல் தூங்கி விட்டோமே, எனத் தங்களையே அவர்கள் நொந்து கொண்டனர். பிறகு சுமந்திரர் ஓட்டிச் சென்ற தேர் சக்கரத்தின் தடத்தை மண்ணில் கண்டனர். அத்தடம், அயோத்தி சென்ற பாதையை நோக்கி அமைந்து இருந்ததால். "இராமபிரான் மீண்டும் அயோத்தியை அடைந்து விட்டார் போல" என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். உடனே அயோத்தி நோக்கி அம்மக்கள் விரைந்தனர். ராமனைக் காண வேண்டி விரைந்து நடந்த அம்மக்கள், ராமனின் மீது கொண்ட அன்பினால், இரண்டு யோசனை தூரத்தை சில நிமிடங்களில் கடந்தனர். அந்நேரம் சுமந்திரரும் அயோத்தியை அடைந்து இருந்தார். அவர் ரதத்தை விட்டு இறங்கியவுடன் முதலில் காணச் சென்றது வஷிஸ்டர் பெருமானை. சுமந்திரரைக் கண்ட வஷிஸ்டரின் கண்கள் உடனே இராமனையும் தேடியது. அதனைப் புரிந்து கொண்ட சுமந்திரர், வஷிஸ்டர் பெருமானிடம் அனைத்து விவரங்களையும், உடன் இராமன் கூறிய செய்திகளையும் தெரிவித்தார்.

பின்னர், வஷிஸ்டரை அழைத்து கொண்டு, சக்கரவர்த்தி தசரதரைக் காண மாளிகைக்குச் சென்றார் சுமந்திரர். ராமனைப் பிரிந்த காரணத்தால் தவித்துக் கொண்டு இருந்த தசரதர் சுமந்திரரைக் கண்டார்." ராமன் வந்து விட்டானா? " என்று கேட்டபடி சுமந்திரரை நோக்கி விரைந்தார். சுமந்திரர் அமைதியாக இருந்தார், பிறகு சுமந்திரர் உடன் இருந்த வஷிஸ்டர் பெருமானை நோக்கி," தவத்தில் சிறந்தவரே தாங்கள் பொய் கூறாதவர், நீங்கள் சொல்லுங்கள் எனது அருமை இராமன் திரும்பி வந்து விட்டான் அல்லவா?" என்றார்.

வஷிஸ்டர் அமைதியாக இருந்தார், மன்னர் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, சுமந்திரர் வருத்தத்துடன் வாய் திறந்தார்," சக்கரவர்த்தி! மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள், அண்ணலும் இளையபெருமாளும் அன்னையுடன் காட்டுக்குப் போய் விட்டார்கள்!" என்று மறுமொழி கூறினார்.

அந்தக் கணத்தில் ...

தசரத சக்கரவர்த்தியின் உயிர் பிரிந்தது! அவர் வானுலகை அடைந்தார்!! மாதேவி கோசலை அதை அறிந்தாள். கொடிய வெயிலில் அகப்பட்டுத் துடிக்கும் புழுவைப் போல துடித்தாள். கணவரின் தலையைத் தன் மடி மேல் எடுத்து வைத்துக் கொண்டாள். கைகளால் முகத்தையும் மார்பையும் தடவித் தடவிப் பார்த்து " நண்டையும், முத்துச்சிப்பியையும்,வாழையையும், மூங்கிலையும் போலத் தன் மகனால் உயிர் அழிந்தாரே !"என்று கூறிக் கதறினாள்.

அப்போது கைகேயி தகவல் அறிந்து ஓடிவந்தாள், சாந்தத்தின் ஸ்வரூபமான மாதேவி கோசலை அவளைக் கண்டாள். அவள் மேல் வெறுப்பையும், கோபத்தையும் கொண்டு சில கணங்களில் காளி ரூபமே எடுத்து விட்டாள்." அடி, கைகேயி! கேகயராஜன் பெற்ற புதல்வியே ! உன் ஆசை இப்போது நிறைவேறியது அல்லவா? கணவரைச் சாகடித்து விட்டாய். இராமனும் இப்போது இல்லை. இனி, இராஜ்யம் முழுவதையும் உனது தலைமேல் கட்டிக் கொண்டு அனுபவி!" என்று கைகேயியைப் பார்த்து சீற்றத்துடன் கத்தினால் கோசலை.

மீண்டும் கோசலை கணவனைப் பார்த்து அழுதாள்." மன்னர் மன்னவா! வேள்வி செய்தீர்! சத்தியம் பேசினீர்! மனுமுறைப்படி நடந்தீர்! அதன் பயன்கள் எல்லாம் இப்போது அனுபவிக்க வானுலகம் சென்றீரோ?" என்றாள். அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த சுமித்திரையும் அழுதாள். பின்னர் வஷிஸ்டர் இவை எல்லாவற்றையும் கண்டு ஊழின் வலியை நினைத்து வருந்தினார்.

" தசரதர் மகனைப் பிரிந்தும் உயிரோடு இருக்கிறார். இவர் கொடியவர் என்று சொல்வதற்கு இடம் வைக்காமல் உயிர் விட்டாரே!"என்று தனக்குள் எண்ணிக் கொண்ட வஷிஸ்டர், உடனே அமைச்சர்களைக் கூட்டினார். அமைச்சர்களும் மன்னர் இறந்த செய்தி கேட்டுத் துடி துடித்துப் போனார்கள்.

நேரம் சென்று கொண்டே இருந்தது, இப்போது மன்னருக்கு யார் ஈமக் கடன்கள் செய்வது என்ற கேள்வி எழுந்தது." நான்கு பிள்ளைகள் இருந்தும் இப்போது மன்னரின் ஈமச் சடங்கு செய்வதற்குப் பிள்ளைகள் யாரும் தற்போது உடன் இல்லையே!. இப்படியா, மன்னரின் மரணம் நிகழ வேண்டும்" என்று பரிதாபம் கொண்டனர் அமைச்சர்கள் .தாங்களே ஈமச் சடங்குகளை நடத்திவிடலாமா? என்றும் சிந்தித்தனர். ஆனால், தசரத சக்கரவர்த்தியின் சுற்றத்தாரோ யாரும் அதற்கு ஒப்பவில்லை.

வஷிஸ்டர் பெருமான் யோசித்தார் " கேகய நாட்டுக்கு, தகவல் அனுப்பி பரதனும் உடன் சத்ருக்கனனும் வருவதற்குள் மன்னரின் பூத உடல் கெட்டு விடும். என்ன செய்ய? ஆனால் துரிதமாக ஏதேனும் செய்தாக வேண்டுமே!" என்று. அக்கணம் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே ஒரு வீரனை அழைத்தார், அவனிடம், "கேகய நாடு சென்று பரதனைக் கண்டு இந்த ஓலையைக் கொடுத்து வா" என்றார். வஷிஸ்டரின் ஆணைப்படி அந்த வீரனும் காற்றின் வேகத்தில் கேகேய நாடு புறப்பட்டான்.

பின்னர் வஷிஸ்டர்,தம்மை சூழ்ந்து இருந்த வருத்தத்தை சற்றே ஒதுக்கி வைத்தார். மன்னரின் பிரேதத்தை கெடாமல் பாதுகாக்கும் பொருட்டு அதனைப் பல விசேஷ மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்க் கடாரத்தில் கிடத்தச் சொன்னார். அமைச்சர்களும் அவ்வாறே செய்தனர். அக்கணம் அயோத்தி நகரமே துக்கத்தில் ஆழ்ந்தது

(தயரதன் உடலைத் தைலத்தில் மூழ்குவித்து வைத்திருந்தமையைக் கூறும் படலம் என்பது பொருள். இராமன் வனம் புகும் செய்தி கேட்டு இறந்துபோன தசரதனது உடம்பை, கேகய நாட்டுக்குச் சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் அளவும் கெடாமல் இருத்தற் பொருட்டுத் தைலத்தில் இட்டு வைத்தகைக் கூறுவதனால் தைலம் ஆட்டு படலம் எனப்பட்டது. ஆட்டுதல் நீர்ஆட்டுதல்என்பது போல அல்லாமல், தைலத்தில் இடுதல் ஆட்டுதல் எனப் பெற்றது.

நகர மாந்தர் தொடர இராமன் தேரில் வனம் சேறலும், இரவில் அனைவரும் வனத்தில் துயில் கொள்ளும்பொழுது இராமன் சுமந்திரனைத் தேருடன் நகர் திரும்பச் சொல்லுதலும், சுமந்திரன் மறுத்து வருந்த, இராமன் தேற்ற, மூவரும் கூறிய செய்திகளுடன் சுமந்திரன் தேரை அயோத்திக்குத் திருப்பிக்கொண்டு சேறலும், இரவில் மூவரும் வழிநடந்து இரண்டு யோசனை தூரம்காட்டிற்குள் சென்றுவிடலும், நகர் திரும்பிய சுமந்திரன் வசிட்டனிடம் செய்தி சொல்ல, வசிட்டன் சுமந்திரனோடு தசரதனை அணுக, தசரதன் மூர்ச்சை தெளிந்து முனிவனை வினவ, முனிவன்பேசாது அகல, சுமந்திரன் இராமன் வனம் புகுந்த செய்தி சொல்ல, தசரதன் உயிர் துறத்தலும், கோசலை, சுமித்திரை, தேவிமார் புலம்பலும், சுமந்திரனால் செய்தி அறிந்த வஷிஸ்டன் வருந்திக் கேகய நாடு சென்ற பரத சத்துருக்கனர் திரும்ப வந்து ஈமக்கடன் செய்யும் அளவும்கெடாமல் இருக்கத் தசரதனது உடலைத் தைலத்தில் இடுதலும், பரதனுக்கு ஓலை அனுப்புதலும், இராமனுடன் காடு சென்ற நகர மக்கள் காலையில் விழித்து இராமனைக் காணாது தேர்ச் சுவடு அயோத்தி செல்வது நோக்கி இராமன் அயோத்தி திரும்பியதாக மகிழ்ந்து நகர் புகுதலும், இராமன் திரும்பாமையும், தசரதன் இறப்பும் அறிந்து வருந்திய நகர மாந்தரை வஷிஸ்டன் தேற்றுதலும் ஆகிய செய்திகள் இதனுள் கூறப் பெற்றுள்ளன.)

செய்தி விளக்கம்

சுமந்திரர் ரதத்தை செலுத்த அயோத்தியின் தவப் புதல்வர் உட்பட அம்மூவரும் காடு நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். அது கண்ட அயோத்தியின் மக்கள் அழுது துடித்தனர். இராமருடைய தேர், அப்போது மக்கள் பெருக்கிய கண்ணீர்க் கடலின் நடுவே செல்லும் ஓடம் போல் அமைதியாகச் சென்றது. அப்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்த சமயம். இராமபிரானின் தேர் போவதைக் கண்ட அயோத்தியை மக்களில் பலர், அதனைப் பின் தொடர்ந்து எப்படியும் இராமபிரானை மீண்டும் அயோத்தியைக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உடன் சென்று இருந்தார்கள்.

அயோத்தியைக் கடந்து அந்த ரதம் இரண்டு யோசனை தூரம் வந்து இருந்த சமயம். மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல், இருள் கவ்வியது. இராமர், சீதை , லக்ஷ்மணர் ஆகிய மூவரும் சுமந்திரருடன் அங்கு காணப்பட்ட அழகிய சோலையில் தங்கினர். இராமரை தொடர்ந்து வந்தவர்களோ, இராமபிரானை விட்டுப் பிரிய மனம் இல்லாமல், சோலையை சுற்றித் திரிந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் மனதில்," எங்கே தாங்கள் தூங்கி விட்டால் ராமன் கானகம் போய்விடுவாரோ " என்ற எண்ணம் ஓடிக் கொண்டு இருக்கவே, தங்களுக்கு வந்த நித்திரையைக் கூட பெரும்பான்மை ஆனவர்கள் அணை போட்டுத் தடுத்து வைத்து இருந்தார்கள்.ஆனால், வெகு நேரம் அவர்களால் உறங்காமல் இருக்க முடியவில்லை. நெடு தூரப் பயணம், அதிக தூரம் நடந்து வந்த களைப்பு, அதன் காரணமாக ஒருவர் பின் ஒருவராக தங்களையும் அறியாமல் நன்கு தூங்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நடு இரவு நேரத்தில் நால்வர் மட்டுமே உறங்காமல் இருந்தனர். ஆம், அவர்கள் ராமர், லக்ஷ்மணர்,சீதை மற்றும் சுமந்திரர் ஆவார்கள்.

ராம பிரான் சுமந்திரரிடம்," சுமந்திரரே இது தான் தக்க சமயம், ரதத்தை எடுத்துக் கொண்டு , ரதத்தின் சக்கரத் தடம் மண்ணில் பதியுமாறு அயோத்தியை நோக்கி விரைந்து ரதத்தை செலுத்துங்கள். நாங்கள் இந்த வழியாக கானகம் சென்று விடுகிறோம். காலையில் எழுந்த நமது அயோத்தியை மக்கள், ரதத்தின் சக்கரத் தடம் அயோத்தியை நோக்கி திரும்பி இருப்பதைக் கண்டு, நாம் நாடு திரும்பியதாக மனம் மகிழ்ந்து மீண்டும் அயோத்தியைக்கு திரும்பி விடுவார்கள்" என்றார்.

இது கேட்ட சுமந்திரர், மிகவும் துக்கம் கொண்டார். இராமரை கண்ணீர் பெருக நோக்கி " இறைவா, நீங்கள் சொல்வது சரி தான், மக்களை ஏமாற்றி விட்டு சென்றுவிடலாம். ஆனால், நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்காக அயோத்தியில் காத்துக் கொண்டு இருக்கும் மன்னரை நான் எப்படி சமாளிப்பது? அவரிடம் என்ன பதில் கூறுவது?" ஒரு கால் இராமர் நாட்டுக்குத் திரும்பி வந்தாலும் வருவார்!" என்று ஆசைப்பட்டுக் கொண்டு, நகரத்திலயே தங்கி இருக்கும் அந்த மக்களுக்கு நான் என்ன பதில் கூற? உங்கள் மூவரையும் கொடிய கானகத்தில் விட்டுக் கொடியவன் நான் மட்டும் வந்தேன் என்று கூறட்டுமா? மன்னரிடம் நான் என்ன கூற? ராமன் உட்பட மூவரும் உடன் வந்து இருக்கிறார்கள் என்று பொய் சொல்லட்டுமா? இல்லை ஸ்ரீ ராமர், சீதையும் லக்ஷ்மணனும் பின் தொடர காடு சென்று விட்டார் இனி அவர் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் தான் வரப் போகிறார் என்ற உண்மையை சொல்லட்டுமா? அப்படி சொன்னாள் அது கேட்ட சக்கரவர்த்தி தான் உயிருடன் இருப்பாரா? இல்லை, அவர் என் முன்னால் உயிர் விடுவதை எப்படி நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? அப்படி நான் பார்த்துக் கொண்டு இருந்தால்,கைகேயியை விட கொடுமைக் காரனாக மாறி விட்டவன் ஆவேனே" என்றார்.

அதற்கு மேல் சுமந்திரரால் பேச முடியவில்லை. அவர் ராமபிரானின் கால்களைப் பற்றிக் கொண்டார். சுமந்திரரை தமது கரங்கள் கொண்டு அன்புடன் தூக்கினார் இராமர். பின்பு அவரிடம்," சுமந்திரரே தாங்கள் அறியாதது அல்ல. எப்பொழுது நாம் இந்த உலகத்தில் பிறந்து விட்டோமோ அப்போதே இன்பத்தையும், துன்பத்தையும் கண்டு சலனம் இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த விவேகத்தை உணர்ந்து அறிந்தவர் தாங்கள். நான் காட்டுக்கு செல்வதை நினைத்துத் தாங்கள் இப்போது வேதனை அடைகின்றீர்கள். அந்த ஒரு காரணத்துக்காகவே நான் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றீர்.அப்படி நான் செய்தால், தந்தையின் வார்த்தையை மீறிய தமையன் என்று நாடு என்னைத் தூற்றாதா? தருமப்படி நடப்பவனாக இராமன் இது வரையில் காட்டிக் கொண்டு இருந்தான். ஆனால், அவன் தருமவான் அல்லன் என்று காண்போர் சொல்லமாட்டார்களா? இப்போது நான் உம்முடன் வந்து விட்டால், தந்தையின் வாக்கை காப்பாற்ற தவறிய என்னைப் பார்த்து, என் குலத்து கதிரவன் கூட வெட்கப் படுவானே. மேலும் இப்போது நான் உங்களுடன் வந்தால் எனது தந்தைக்கும் அல்லவா இழுக்கு?. ஆதலால் , நான் சொல்வதை மட்டும் செய்வீராக " என்று கூறி முடித்தார் ராம பிரான்.

ராமனின் சொல் கேட்ட சுமந்திரர், தன்னை தேற்றிக் கொண்டு, " தங்கள் சித்தப்படியே பிரபு, ஆனால் நான் போவதற்கு முன்னால், எனக்குத் தங்களிடம் இருந்து வேறு ஏதேனும் செய்திகள் அயோத்தியில் சொல்ல உண்டா?" என்றார்.

அதற்கு ராமர்," சுமந்திரரே தாங்கள் முதலில் வசிஷ்ட முனிவரிடம் செல்வீர், அவரிடம் எனது வணக்கத்தை செலுத்துவீர். பின்னர் அவரை அழைத்து கொண்டு எனது தந்தையிடம் போவீர். முனிவரைக் கொண்டு," இராமன் காடு போகிறோமே என்று சிறிதும் வருத்தப் படவில்லை . வனவாசத்தில் தனக்கு நன்மையே ஏற்படும் என்று கருதுவதாக அவரிடம் மேலும் தெரிவியுங்கள். அது போல, என் மீது எனது தந்தை காட்டும் அந்த அன்பை, பரதனிடமும் காட்டும் படி சொல்லுங்கள். அப்படியே, சிற்றன்னை கைகேயி தேவியாரின் மேல், பழையபடி தந்தையை அன்பு செலுத்துமாறு நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

பின்பு தாயாரிடம் சென்று தந்தைக்கு உதவியாக இருக்கும் படிக் கூறுங்கள்" இதுவே நான் உங்களிடம் கொடுக்கும் செய்தி என்றார்.

பிறகு சுமந்திரர் சீதா தேவியை நோக்கினார், அவரது பார்வையின் அர்த்தத்தை அறிந்து கொண்ட சீதை அவரிடம்," சுமந்திரரே, நீர் சென்றதும் எனது வணக்கத்தை முதலில் எனது மாமனாருக்கு சொல்வீர்களாக. பின்பு, நான் வளர்த்து வந்த என் அன்புள்ள நாகணவாய்ப் பறவையையும் கிளியையும் பரிவுடன் காத்து வருவீராக. இதை என்னிடம் அன்பு வைத்திருக்கும் தங்கைகளுக்கும் சொல்வீராக !" என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுமந்திரர் அதிகத் துன்பம் அடைந்தார்." காடு செல்வதால் ஏற்படும் துன்பத்தைப் பற்றி அன்னை கவலைப் படவில்லையே. தான் நாட்டில் விட்டு வந்த பறவைகளை நினைத்து அல்லவா கவலைப் படுகிறாள்! இது என்ன குழந்தைத் தனம்?" என்று மனதுக்குள் எண்ணக் குமிழியிட அவர் மனம் வருந்தினார். அது கண்ட ராமர் சுமந்திரரிடம் தோன்றிய அந்த வருத்தத்தை, தன் வார்த்தைகள் கொண்டு தேற்றினார். ஒருவாறு ராமனின் தேற்றுதளால் மன சாந்தி அடைந்த சுமந்திரர், லக்ஷ்மணனைப் பார்த்து," தாங்கள் உங்கள் தந்தையிடம் சொல்ல வேண்டிய செய்திகள் ஏதேனும் உண்டா?" என்றார்.

லக்ஷ்மணன் அந்தக் கணம் கோபக் காரனாக மாறினான். அக்கோபம் வார்த்தைகளில் கலந்து வெளி வந்தது," சுமந்திரரே,என் அண்ணனுக்கு ராஜ்ஜியம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய தசரதரை ஒரு பொருட்டாக மதித்து செய்தி தான் சொல்ல வேண்டுமோ? அவருக்கு நான் அவசியம் ஏதேனும் செய்தி சொல்லி ஆகவேண்டும் என்றால் சொல்கிறேன். கேளும்." காட்டில் இராமபிரான் காய் கிழங்கு உண்ண, சத்தியசந்தன் என்று பேர் கொண்ட நீர் அறுசுவை உணவை உண்டு வாழ்க! " என்று நான் கூறியதாக அந்தப் பெரியவரிடம் போய்ச் சொல்லும். அத்துடன் சத்ருக்கனனிடம் "நீ அந்தக் கொடிய பரதனுடன் சேர்ந்தமைக்காக நான் இனி உன்னை தம்பியாகவே கொள்ளமாட்டேன். என்னோடு நானே தனித்துப் பிறந்து கொண்டதாக நினைத்துக் கொள்கிறேன்" என்று போய் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் சுமந்திரரே என்றான்.

லக்ஷ்மணின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இராமபிரான் அவனை கண்டித்தார். அத்துடன் லக்ஷ்மணன் சொன்ன வார்த்தைகளுக்காக சுமந்திரரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் .பிறகு சுமந்திரர் அவ்விடம் விட்டு ராமபிரான் சொன்னபடியே ரதத்தின் சக்கரத் தடம் மண்ணில் பதிய ரதத்தை ஒட்டிக் கொண்டு அயோத்தியை சென்று சேர்ந்தார்.

பிறகு சுமந்திரர் அந்தப் பக்கம் போனவுடன், இராமபிரான் ஓசைகள் ஏதும் இன்றி காட்டின் இன்னொரு பக்கமாக நிலவின் ஒளி வழிகாட்ட இரண்டு யோசனை தூரம் நடந்தார். அப்போது உதய வேளையை நெருங்கியது. பொழுதும் கொஞ்சம், கொஞ்சமாக விடியத் தொடங்கியது. காரிருள் அகன்றது.

அந்த சோலையில் உறங்கிக் கொண்டு இருந்த அயோத்தியை மக்கள் மெல்லக் கண் விழித்தனர். முதலில், இராமபிரானைக் காணாமல் பதறினர். தன்னையும் அறியாமல் தூங்கி விட்டோமே, எனத் தங்களையே அவர்கள் நொந்து கொண்டனர். பிறகு சுமந்திரர் ஓட்டிச் சென்ற தேர் சக்கரத்தின் தடத்தை மண்ணில் கண்டனர். அத்தடம், அயோத்தி சென்ற பாதையை நோக்கி அமைந்து இருந்ததால். "இராமபிரான் மீண்டும் அயோத்தியை அடைந்து விட்டார் போல" என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். உடனே அயோத்தி நோக்கி அம்மக்கள் விரைந்தனர். ராமனைக் காண வேண்டி விரைந்து நடந்த அம்மக்கள், ராமனின் மீது கொண்ட அன்பினால், இரண்டு யோசனை தூரத்தை சில நிமிடங்களில் கடந்தனர். அந்நேரம் சுமந்திரரும் அயோத்தியை அடைந்து இருந்தார். அவர் ரதத்தை விட்டு இறங்கியவுடன் முதலில் காணச் சென்றது வஷிஸ்டர் பெருமானை. சுமந்திரரைக் கண்ட வஷிஸ்டரின் கண்கள் உடனே இராமனையும் தேடியது. அதனைப் புரிந்து கொண்ட சுமந்திரர், வஷிஸ்டர் பெருமானிடம் அனைத்து விவரங்களையும், உடன் இராமன் கூறிய செய்திகளையும் தெரிவித்தார்.

பின்னர், வஷிஸ்டரை அழைத்துக் கொண்டு, சக்கரவர்த்தி தசரதரைக் காண மாளிகைக்குச் சென்றார் சுமந்திரர். ராமனைப் பிரிந்த காரணத்தால் தவித்துக் கொண்டு இருந்த தசரதர் சுமந்திரரைக் கண்டார்." ராமன் வந்து விட்டானா? " என்று கேட்டபடி சுமந்திரரை நோக்கி விரைந்தார். சுமந்திரர் அமைதியாக இருந்தார், பிறகு சுமந்திரர் உடன் இருந்த வஷிஸ்டர் பெருமானை நோக்கி," தவத்தில் சிறந்தவரே தாங்கள் பொய் கூறாதவர், நீங்கள் சொல்லுங்கள் எனது அருமை இராமன் திரும்பி வந்து விட்டான் அல்லவா?" என்றார்.