திருவிருந்து திருவிழா என் இதயம் தினம் விழா - 2

bookmark

என் இயேசு தேவன் உடலும் குருதியும்
உயிரில் கலந்திடும் விழா

1. இறை வேள்வித் தீயினிலே என் இதயம் தூய்மை பெறும்
நிறை தியாகப் பலியினிலே வெண் பனிபோல் மாறிவிடும் (2)
அமைதிப்புறா இது அன்புநிலா எந்த இரவிலும் ஒளியின் விழா
இறைஅனுபவம் பகிர்வு விழா

2. இறை வருகையின் வேளையிலே அன்புக் கனலாய் மாறுகிறேன்
சுயநலத்தின் அழிவினிலே புது உலகமே காணுகிறேன் (2)
இதயமில்லா ஒரு மனிதரிலா அந்த இறைவன் பிறப்பு விழா
அது நீத்தார் நினைவு விழா