தந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன்

bookmark

என் வாழ்வை முழுவதும் உன்னிடம் தந்தேன்
ஏற்றருள்வாய் என் இறைவா ஏற்றருள்வாய் (2)

1. உலகினை எனக்களித்தாய் அதில்
உயர்வாம் பொருளையும் சேர்த்தளித்தாய்
மனதினை உனக்களித்தேன் என்
மண்ணிலே மகிழ்ந்திட்ட மனமளித்தேன்
புனிதமாக்கும் என் மனதை புனிதமாக்கும் புனிதமாக்கும்

2. வலிமையை எனக்களித்தாய் உடன்
வளம் சேர் அறிவையும் சேர்த்தளித்தாய்
வலிமையைப் பயன்படுத்தி நான்
நலனோடு நலிவும் அனுபவித்தேன்
புனிதமாக்கும் என் உழைப்பை புனிதமாக்கும் புனிதமாக்கும்