சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தின் பாடல்கள்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
சூர்ப்பணகை வந்த போது இராவணன் இருந்த நிலை
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண் நகரில் கடிது ஓடி, சீதை தன்மை
உரைப்பென் எனச் சூர்ப்பணகை வர, இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என, நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது,ஒரு புனை மணிமண்டபம் அதனில் பொலிய மன்னோ.
புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை,தடிக்கும் முலை,வேய் இளந்தோள்,சேயரிக்கண் வென்றிமாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ.
வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்-தோள்
விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய மால் வரையின் விளங்க, மீதில்
குண்டலங்கள், குல வரையை வலம்வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க மன்னோ.
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க, வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற, ஆன்ற
நாள் எலாம் புடை, தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட
கோள் எலாம் கிடந்த நெடுஞ்சிறை அன்ன நிறை ஆரம் குலவ மன்னோ.
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்,
தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே.
மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர்,
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல்,
தேவரும் அவுணரும் முதலினோர், திசை
தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே.
இன்னபோது, இவ் வழி நோக்கும் என்பதை
உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர்,
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே.
மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும்,
தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர்,
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்,
சிங்க ஏறு என, திறல் சித்தர் சேரவே.
அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்,
என்னைகொல் பணி? என இறைஞ்சுகின்றனர்,
கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர்.
பிரகர நெடுந் திசைப் பெருந் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என, நடுங்கும் நாவினர்,
உரகர்கள், தம் மனம் உலைந்து சூழவே.
திசை உறு கரிகளைச் செற்று, தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து, வான் எலாம்
அசைவுறப் புரந்தரன் அடர்ந்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே.
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய, பழுது இல் பண் இடை
வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை,
வாணியின் நாரதன், செவியின் வார்க்கவே.
மேகம் என் துருத்தி கொண்டு, விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீந் தேன் புனலோடும் அளாவி, நவ்வித்
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும்
சீகர மகர வேலைக் காவலன், சிந்த மன்னோ.
நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும்,
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப மன்னோ.
மின்னுடை வேத்திரக் கையர், மெய் புகத்
துன் நெடுங் கஞ்சுகத் துகிலர், சோர்விலர்,
பொன்னொடு வெள்ளியும், புரந்தராதியர்க்கு
இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே.
சூலமே முதலிய துறந்து, சுற்றிய
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்,
தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம்,
காலன் நின்று, இசைக்கும் நாள் கடிகை கூறவே.
நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ
கயங்களில் மரை மலர்க் காடு பூத்தென,
வயங்கு எரிக் கடவுளும், விளக்கம் மாட்டவே.
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து, நல்
புதிது அலர் கற்பகத் தருவும், பொய் இலாக்
கதிர் நெடு மணிகளும், கறவை ஆான்களும்,
நிதிகளும், முறை முறை நின்று, நீட்டவே.
குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால்,
உண்டுகொல் இரவு, இனி உலகம் ஏழினும்?
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே.
கங்கையே முதலிய கடவுட் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட,
செங் கையில் அரிசியும் மலரும் சிந்தினர்,
மங்கல முறை மொழி கூறி, வாழ்த்தவே.
ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம்
காரினில் செருக்கிய கலாப மஞ்ஞைபோல்
வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின்,
நாரியர், அரு நடம் நடிப்ப, நோக்கியே.
இருந்தனன்-உலகங்கள் இரண்டும் ஒன்றும், தன்
அருந் தவம் உடைமையின், அளவு இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன், புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே.
சூர்ப்பணகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
தங்கையும், அவ் வழி, தலையில் தாங்கிய
செங் கையள், சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள், மூக்கிலள், குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள்.
முடையுடை வாயினள், முறையிட்டு, ஆர்த்து எழு
கடையுகக் கடல் ஒலி காட்டக் காந்துவாள்,
குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள்,
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள்.
தோன்றலும், தொல் நகர் அரக்கர் தோகையர்,
ஏன்று எதிர், வயிறு அலைத்து, இரங்கி ஏங்கினார்;
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்,
தான் தனியவள் வர, தரிக்க வல்லரோ?
பொருக்கென நோக்கினர், புகல்வது ஓர்கிலர்,
அரக்கரும், இரைந்தனர்; அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப் புடைத்து, கண்களில்
நெருப்பு எழ விழித்து, வாய் மடித்து, நிற்கின்றார்.
இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ? ஆழியானதோ?
சந்திரமௌலிபால் தங்குமேகொலோ,
அந்தரம்? என்று நின்று அழல்கின்றார் சிலர்.
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்?
முப் புறத்து உலகமும் அடங்க மூடிய
இப் புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது;
அப் புறத்து அண்டத்தோர் ஆர்? என்றார் சிலர்.
என்னையே! "இராவணன் தங்கை" என்றபின்,
"அன்னையே" என்று, அடி வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ, ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள், தான் என்றார் சிலர்
என்னையே! "இராவணன் தங்கை" என்றபின்,
"அன்னையே" என்று, அடி வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ, ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள், தான் என்றார் சிலர்.
போர் இலான் புரந்தரன், ஏவல் பூண்டனன்;
ஆர் உலாம் நேமியான், ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான்; நெருப்பினான், பொருப்பினான்; இனி
ஆர் கொலாம் ஈது?" என, அறைகின்றார் சிலர்.
சொல்-பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ?
"இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்;
கற்பு இறந்தாள்" என, கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன்போல்?" என்றார் சிலர்.
தத்து உறு சிந்தையர், தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே? பிழைப்பு இல் சூழ்ச்சியார்
முத் திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார்
இத் திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர்.
இனி ஒரு கற்பம் உண்டுஎன்னில் அன்றியே,
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ?
பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர்.
கரை அரு திரு நகர்க் கருங் கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்க் கரம் நெரிந்து நோக்கினர்;
பிரை உறு பால் என, நிலையின் பின்றிய
உரையினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார்.
முழவினில் வீணையில், முரல் நல் யாழினில்
தழுவிய குழலினில், சங்கில் தாரையில்
எழு குரல் இன்றியே, என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்றுஅரோ.
கள்ளுடை வள்ளமும், களித்த தும்பியும்,
உள்ளமும், ஒரு வழிக் கிடக்க ஓடினார்-
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்-
தள்ளுறும் மருங்கினர், தழீஇக் கொண்டு ஏகினார்.
நாந்தக உழவர்மேல் நாடும் தண்டத்தர்,
காந்திய மனத்தினர், புலவி கைம்மிகச்
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக,
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர்.
பொன் -தலை மரகதப் பூகம் நேர்வு உறச்
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார்
சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார்.
எழு என, மலை என, எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர் நெகிழ, தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதர, சிலர் உளம் பொருமி விம்முவார்.
நெய்ந் நிலைய வேல் அரசன், நேருநரை இல்லான்
இந் நிலை உணர்ந்த பொழுது, எந் நிலையம்? என்று,
மைந் நிலை நெடுங் கண் மழை வான் நிலையது ஆக,
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர், புரண்டார்.
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்;
கனம் தலை வரும் குழல் சரிந்து, கலை சோர,
நனந் தலைய கொங்கைகள் ததும்பிட, நடந்தார்;-
அனந்தர் இள மங்கையர்-அழுங்கி அயர்கின்றார்.
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இதுகொல்? என்று, தளர்கின்றார்,
கொங்கை இணை செங் கையின் மலைந்து,-குலை கோதை
மங்கையர்கள்-நங்கை அடி வந்து விழுகின்றார்.
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல, என்றும்
வலங் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா;
நலம் கையில் அகன்றதுகொல், நம்மின்? என நைந்தார்;
கலங்கல் இல் கருங் கண் இணை வாரி கலுழ்கின்றார்.
அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
என்று, இனைய வன் துயர் இலங்கைநகர், எய்த,
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட,
குன்றின் அடி வந்து படி கொண்டல் என, மன்னன்
பொன் திணி கருங் கழல் விழுந்தனள், புரண்டாள்.
மூடினது இருட் படலம் மூஉலகும் முற்ற;
சேடனும் வெருக்கொடு சிரத் தொகை நெளித்தான்;
ஆடின குலக் கிரி; அருக்கனும் வெயர்த்தான்;
ஓடின திசைக் கரிகள்; உம்பரும் ஒளித்தார்.
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர, மீதிட்டு
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப,
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற,
திரிந்த புவனங்கள்; வினை, தேவரும், அயர்த்தார்.
தென் திசை நமன்தனொடு தேவர் குலம் எல்லாம்,
இன்று இறுதி வந்தது நமக்கு என, இருந்தார்,
நின்று உயிர் நடுங்கி, உடல் விம்மி, நிலை நில்லார்,
ஒன்றும் உரையாடல் இலர், உம்பரினொடு இம்பர்.
யார் செய்தது இது என இராவணன் வினவல்
மடித்த பில வாய்கள் தொறும், வந்து புகை முந்த,
துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப,
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல, மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி, யாவர் செயல்? என்றான்.
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்;
மீனுடை நெடுங் கொடியினோன் அனையர்; மேல் கீழ்
ஊனுடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா
மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள்.
இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
செய்தனர்கள் மானிடர் என, திசை அனைத்தும்
எய்த நகை வந்தது; எரி சிந்தின; கண் எல்லாம்,
நொய்து அலர் வலித் தொழில்; நுவன்ற மொழி ஒன்றோ?
பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல் என்றான்.
சூர்ப்பணகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
மன்மதனை ஒப்பர், மணி மேனி; வட மேருத்
தன் எழில் அழிப்பர், திரள் தாலின் வலிதன்னால்,
என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால்.
வந்தனை முனித்தலைவர்பால் உடையார்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்?
வற்கலையர்; வார் கழலர்; மார்பின் அணி நூலர்;
விற் கலையர்; வேதம் உறை நாவர்; தனி மெய்யர்;
உற்கு அலையர்; உன்னை ஓர் துகள்-துணையும் உன்னார்;
சொற் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார்.
மாரர் உளரே இருவர், ஓர் உலகில் வாழ்வார்?
வீரர் உளரே, அவரின் வில் அதனின் வல்லார்?
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள், ஐயா?
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்.
"ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை" எனச் சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப, "உலகு எல்லாம்
வேறும்" எனும் நுங்கள் குலம், "வேரொடும் அடங்கக்
கோறும்" என, முந்தை ஒரு சூளுறவு கொண்டார்.
தராவலய நேமி உழவன், தயரதப் பேர்ப்
பராவ அரு நலத்து ஒருவன், மைந்தர்; பழி இல்லார்;
விராவ அரு வனத்து, அவன் விளம்ப, உறைகின்றார்;
இராமனும் இலக்குவனும் என்பர், பெயர் என்றாள்.
இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர்; அறிந்தும், உயிர் வாழ்வார்;
விருந்து அனைய வாளொடும், விழித்து, இறையும் வெள்காது,
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு, இன்னும்.
கொற்றம் அது முற்றி, வலியால் அரசு கொண்டேன்;
உற்ற பயன் மற்று இதுகொலாம்? முறை இறந்தே
முற்ற, உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து, இது பொருந்தும் எனல் ஆமே?
மூளும் உளது ஆய பழி என்வயின் முடித்தோர்
ஆளும் உளதாம்; அவரது ஆர் உயிரும் உண்டாம்;
வாளும் உளது; ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள; தோளும் உள; நானும் உளென் அன்றோ?
பொத்துற உடற்பழி புகுந்தது
"பொத்துற உடற்பழி புகுந்தது" என நாணி,
தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா!
எத் துயர் உனக்கு உளது? இனி, பழி சுமக்க,
பத்து உள தலைப் பகுதி; தோள்கள் பல அன்றே?
என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
என்று உரைசெயா, நகைசெயா, எரி விழிப்பான்
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர்? என்றான்.
சூர்ப்பணகை நடந்தது நவிலல்
அற்று அவன் உரைத்தலோடும், அழுது இழி அருவிக்கண்ணள்,
எற்றிய வயிற்றள், பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள்
சுற்றமும் தொலைந்தது, ஐய! நொய்து என, சுமந்த கையள்,
உற்றது தெரியும்வண்ணம், ஒருவகை உரைக்கலுற்றாள்;
"சொல்" என்று என் வாயில் கேட்டார்; தொடர்ந்து ஏழு சேனையோடும்
"கல்" என்ற ஒலியில் சென்றார், கரன் முதல் காளை வீரர்;
எல் ஒன்று கமலச் செங் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில் என்றாள்.
தாருடைத் தானையோடும் தம்பியர், தமியன் செய்த
போரிடை, மடிந்தார் என்ற உரை செவி புகாதமுன்னம்,
காரிடை உருமின், மாரி, கனலொடு பிறக்குமாபோல்
நீரொடு நெருப்புக் கான்ற, நிரை நெடுங் கண்கள் எல்லாம்.
நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய? என்றான்.
என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுத ஒணாத
தன்மையன் இராமனோடு தாமரை தவிரப் போந்தாள்
மின்வயின் மருங்குல் கொண்டாள், வேய்வயின் மென் தோள் கொண்டாள்
பொன்வயின் மேனி கொண்டாள், பொருட்டினால் புகுந்தது என்றான்.
சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்
ஆர் அவள்? என்னலோடும், அரக்கியும், ஐய! ஆழித்
தேர், அவள் அல்குல்; கொங்கை, செம் பொன் செய் குலிகச் செப்பு;
பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா!
பேர் அவள், சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்
காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்;
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத்
தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்;
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ?
மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடிந்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள்; ஐய!
அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும், கடலினும் பெரிய கண்கள்!
"ஈசனார் கண்ணின் வெந்தான்" என்னும் ஈது இழுதைச்சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டவன், வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன், அவ் உருவம் அம்மா!
தெவ் உலகத்தும் காண்டி; சிரத்தினில் பணத்தினோர்கள்
அவ் உலகத்தும் காண்டி; அலை கடல் உலகில் காண்டி;
வெவ் உலை உற்ற வேலை, வாளினை, வென்ற கண்ணாள்
எவ் உலகத்தாள்? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால்!
தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்;
நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ?
வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!
இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!
பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-
மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி!
பிள்ளைபோல் பேச்சினாளைப் பெற்றபின், பிழைக்கலாற்றாய்;
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி; ஐய!
வள்ளலே! உனக்கு நல்லேன்; மற்று, நின் மனையில் வாழும்
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே!
தேர் தந்த அல்குல் சீதை, தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார்தம் வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத்தாளை, தருக்கினர் கடைய, சங்க
நீர் தந்தது; அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே.
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை, சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ; உன் வாளை வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம், இராமனைத் தருதி என்பால்.
தருவது விதியே என்றால், தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி, வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி, நீ எந்தாய்!
அன்னவள்தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற
என்னை, அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்குவாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும்; உன்னின்
சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென் என்னச் சொன்னாள்.
இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
கோபமும், மறனும், மானக் கொதிப்பும், என்று இனைய எல்லாம்
பாபம் நின்ற இடத்து நில்லாப் பெற்றிபோல், பற்று விட்ட,
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின், புக்க
தாபமும் காமநோயும் ஆர் உயிர் கலந்த அன்றே.
கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்.
சிற்றிடச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ?
மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட
எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்;
அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல,
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே.
விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே.
பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே?
எழுந்தனன் இருக்கை நின்று; ஆண்டு, ஏழ் உலகத்துள்ளோரும்
மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின, சங்கம் எங்கும்,
பொழிந்தன பூவின் மாரி; போயினர் புறத்தோர் எல்லாம்
அழிந்து ஒழிசிந்தையோடும் ஆடகக் கோயில் புக்கான்.
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளிப் பாங்கர்,
தேவிமார் குழுவும் நீங்கச் சேர்ந்தனன்; சேர்தலோடும்,
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், குயமும், புக்குப்
பாவியா, கொடுத்த வெம்மை பயப்பயப் பரந்தது அன்றே.
நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடி ஆய்ப்
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்,
ஆக்கை, தேய, உள்ளம் நைய, ஆவி வேவது ஆயினான்.
இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
இராவணன் நிலவைப் பழித்தல்
இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
தமிழ் பாடல்கள்
இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
பிறையைக் குறை கூறல
இராவணன் இருளினை ஏசுதல்
சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்
சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
இராவணன் தென்றலைச் சீறுதல்
இராவணன் மாரீசனை அடைதல்