சுவருக்கும் காது உண்டு
"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார் டாக்டர்.."
"இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?"
"பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
"அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே..?"
"விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்?"
நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ரூல்ஸ் இடம் கொடுக்காது!
கேப்டன்: இந்தப் பந்துல 2 பேர் அவுட் ஆவாங்கன்னு நான் ஏகப்பட்ட பணம் வாங்கிட்டேனே சார் இப்ப என்ன செய்றது....?
"இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?"
"ஏன் கேக்கறீங்க..?"
"டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்.. பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான்"
"எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்.."
"சரி.. அதுக்கும் சுவர்ல ஜிமிக்கியா மாட்டி வெச்சிருக்காரே.. அதுக்கும் என்ன சம்பந்தம்..?"
"சுவருக்கும் காது உண்டுனு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!"
