கணவாய் மீன்

கணவாய் மீன்

bookmark

கணவாய் மீன்

இதனுடைய 8 கைகளின் உட்புறங்களிலும் உள்ள உறிஞ்சு கிண்ணங்களால் இரையைப் பிடிக்கவும் நழுவாமல் ஒட்டிக்கொள்ளவும் முடிகிறது. 

இரு பெரிய நீண்ட உணர்விழைகளை உடைய இம்மீன்கள் நீந்துவதற்கு ராக்கெட் தத்துவத்தைப் பயன்படுத்துகின்றன. அதாவது கடல் நீரை உடல் முழுவதும் நிரப்பிக்கொண்டு அதைப் பின்புறமாக வேகமாக வெளியேற்றி அதனால் ஏற்படும் விசையினால் அது முன்தள்ளப்பட்டு நீந்துகின்றன.

இதற்க்கு மூன்று இதயங்கள் உள்ளன.

இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள கோலங்களையும் வண்ணங்களையும் சுற்றுப் புறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவை.

இதன் கரு விழி டபிள்யூ (W) என்னும் ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும்.