ஏழிசை நாதனே எழுவாய் - இறை

bookmark

அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்

1. வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து (2)
உறவை வளக்கும் விருந்து -2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து (2)

2. விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு (2)
மனிதம் வாழும் தெய்வம் -2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் ... ...