என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

bookmark

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் உன்னோடுதான்

1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும்
கரையாத அவரன்பு குறையாது (2)
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே (2)
தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2