உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்

bookmark

ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே (2)

1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழை போல் ஆவி ஊற்றினீர் (2)
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை -2
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - 2

2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்மொழியில் துதிக்க வேண்டுமே (2)
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் -2
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே -2