
உன் கையில் பதில்

ஒரு நாள் ஜென் குரு நடந்து வந்து கொண்டிருக்கையில் சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தன் முதுகுக்குப்பின் தன் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.
ஜென் குருவைப் பார்த்து அந்தச் சிறுவன் குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா? என்று கேட்டான்.
குரு இறந்து விட்டது என்று சொன்னால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது என்றும், அப்படி இல்லாமல் குரு உயிருடன் உள்ளது என்று கூறினால் தானே அந்தக் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் என்றும் மனதிற்குள்ளேயே முடிவெடுத்து வைத்துக் கொண்டு குருவிடம் கேட்டான்.
இதனை அறிந்த குரு, உன்னுடையக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில் தான் உள்ளது என்று சொல்லிவிட்டுச் சென்றார்.