ஆவியிலே புதுமை அடைவோம் அருள்

bookmark

ஆழியிலே மூழ்கிக் களிப்போம்
இயேசுவுக்குச் சான்று பகர்வோம் அவர்
சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் (2)

1. அன்பு என்னும் ஆடையணிவோம் நல்ல
ஆனந்த அமைதி அடைவோம்
ஆதிசபை வாழ்க்கையினை ஆண்டவன் ஆவியிலே
வீதியெங்கும் கண்டு களிப்போம் - நாம்

2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் பெரும்
சோதனையாம் புயலும் வீசலாம்
இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார்
நிறை வாழ்வு இன்று அடைவோம் - நாம்