ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்

bookmark

உன்னுடலைச் சுவைத்திட போதாதய்யா
என் இயேசுவே என் தெய்வமே
ஏழையின் உணவாய் வந்தவரே (2)
வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா (2)

1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை
எரிந்திடும் தீபம் நீதானய்யா - என்றும்
அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்
கேட்டிட எழுவதும் நீதானய்யா - எங்கள்
துயரத்தில் ஆறுதல் ஆனவரே
சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ

2. துணை ஏதுமின்றி வாடிடும் நேரம்
அருட்கரம் தருவதும் நீதானய்யா
நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போதும்
அருகினில் இருப்பதும் நீதானய்யா - எங்கள்
வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்
பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய்