முட்டாள்தனம்
உலர்ந்த நிலத்தில் மூழ்குவது முட்டாள்தனம்.
செவிடன் காதில் சங்கூதுவது முட்டாள்தனம்.
மற்றவர் முட்டாள்தனத்தில் ஆதாயம் தேடு.
(அ) சரசுவதி இருக்குமிடத்தில் லட்சுமி இருந்திடாள் (ஆ) மதி மீது காதல் நிதி தராது.
ஆசைகள் முட்டாள்தனமானவை.
கழுதைகளுக்கு இடையே உதைகளைத் தவிர வேறென்ன நிகழும்?
(அ) முட்டாள்தனம் ஒரு தீராத நோய் (ஆ) முட்டாள்தனத்தைப்போல் தீராத நோய் இல்லை.
குறுகிய கால முட்டாள்தனம் சாலச் சிறந்தது.
பாதுகாப்புக்கு அறிவுறை கூறி சுய பாதுகாப்பை அசட்டை செய்வது முட்டாள்தனம்.
எரியும் வீட்டை அணைக்கக் கிணறு தோண்டுவது போல.
முட்டாளின் பணம் விரைவில் அவனைப் பிரிந்து விடும்.
நாற்பது வயதிலும் முட்டாள் உண்மையாகவே முட்டாள்தான்.
முட்டாள் தன் மண்டையை உடைத்துக்கொள்ளத்தானே தடி எடுப்பான்.
பாட்டில்லாமல் கூத்தாடுபவனே முட்டாள்.
தன் நிழலோடு தானே சண்டையிடுவான் முட்டாள்.
முட்டாளும் மௌனியானால் அறிவாளி.
முட்டாள் பிடித்த சட்டி விரைவில் சூடாகும்.
பைத்தியமும் முட்டாளும் சாட்சியாக மாட்டார்கள்.
அர்த்தமற்ற பேச்சே அடிமுட்டாள் பேச்சு.
சொல்வதையெல்லாம் யோசித்துச் சொல்பவன் புத்திசாலி நினைத்ததை எல்லாம் சொல்பவன் முட்டாள்.
முட்டாளுக்கு வழங்கப்படும் அறிவுரை ஒரு காதில் நுழைந்து மறு காதில் வெளியே வந்துவிடும்.
(அ) முட்டாள்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் (ஆ) முட்டாள்கள் முற்றிலும் மடிந்து விடவில்லை.
கழுதையைப் பார்த்துக் கத்துபவன் கழுதையாவான்.
எளிதில் முட்டாளாகுபவன் அயோக்கியனின் கருவி.
முட்டாளுடன் சேர்ந்து சிரிப்பதைவிட அறிவாளியுடன் சேர்ந்து அழுவது மேல்.
குழந்தையும் முட்டாளும் உண்மை விளம்பிகள்.
முட்டாளுக்கே அதிர்ஷ்டம் அடிக்கும்.
தேவதை அடியெடுத்து வைக்க அஞ்சுமிடத்தில் முட்டாள் வேகமாக நுழைவான்.
செய்யாதே என்பதை முதலில் செய்வான் முட்டாள்.
உலகில் முட்டாள்கள் பாதி அயோக்கியர்கள் மீதி.
அருவருப்பான உண்மையை அடிமுட்டாளைத் தவிர யாரும் கூற மாட்டார்கள்.
முட்டாளைக் கடை வீதிக்கு அனுப்பினால் முட்டாளாகவே திரும்புவான்.
முட்டாள் மற்றவர்களையும் முட்டாளாக்குவான்.
முட்டாள்களின் உபதேசம் முக்தி தராது.
