மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

bookmark

கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோயுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்