மனுவான வார்த்தை நம்மோடு வாழ

bookmark

மகிழ்ந்து வருகின்றார்
முடிவில்லா வாழ்வின் முன்னோடியாக
விருந்து படைக்கின்றார்
திரு விருந்து படைக்கின்றார்

1. மரியாளின் மடியில் மழலையாய் உதித்த
மகவாக வருகின்றார் (2)
அருளாளர் சிமியோன் அன்போடு ஏந்திய
நம் மீட்பர் வருகின்றார் -2

2. பணிசெய்யும் தன்னை பலியாக்க நாளும்
பரிவோடு வருகின்றார் (2)
இறைவார்த்தை விதைத்து இறையாட்சி வளர
இதயத்தில் எழுகின்றார் -2

3. அருள்வாக்கு வழியில் ஆன்மீக உறவில்
ஆண்டவர் வருகின்றார் (2)
எம்மாவுஸ் சென்ற சீடர்கள் போல நம்மோடும் நடக்கின்றார் - 2