பண மாலை
"இன்ஸ்பெக்டருக்கு அரசியல் ஆர்வம் வந்திடுச்சுன்னு எப்படிச் சொல்ற கபாலி?"
"மாமூலை 'பண மாலையா' போடச் சொல்றாரே!"
"கரும்புத் தோட்டத்திலே வேலை பாக்கிறதை ஏன் விட்டுட்டே?"
"சக்கையாப் பிழிஞ்சிடுறாங்க...."
"இப்படி ஆபீஸ் வாசல்ல பிச்சை எடுக்கிறீயே! உனக்கு வெட்கமா இல்லே?"
"என்ன பண்றது... உள்ளே அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே."
"இவருக்கிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?"
"லைபாய் சோப் ஏஜெண்ட்!"
"பாகவதர் பாடுற காபிராகம் சப்புன்னு இருக்கே! ஏன்?"
"அவரு சுகர் பேஷண்ட்டாம்."
