படியேறி வருகின்றேன் தேவா என்னை

bookmark

பலியாக்க வருகின்றேன் தேவா நான்
படியேறி வருகின்றேன் தேவா

1. மகனையே பலியாகக் கேட்டாய் - ஆபிரகாம்
மனமார பலியாக்க வந்தார் (2)
மனதினை மாசின்றிக் கேட்டாய் - நான்
மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே

2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை
நீ வேண்டும் வாவென்று சொன்னாய் (2)
பிழை செய்து நான் வாழ்ந்த போதும் - நீ
தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்