நகர் நீங்கு பாடலாதின் பாடல்கள்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இராமன் கோசலை உரையாடல்
குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையாள் மௌலி கவித்தனன் வருமென்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்.
புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்? என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு? என்றாள்.
மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான் என்றான்.
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன் எனக் கூறினாள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள்.
என்று, பின்னரும், மன்னன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி, ஊழி பல என்றாள்.
தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஓர் பணி என்று இயம்பினான்.
"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான் என்றான்.
இராமன் காட்டிற்கு செல்லவேண்டும் எனக் கேட்ட கோசலையின் துயரம்
ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.
வஞ்சமோ, மகனே! உனை, "மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு" என்ற வாசகம்?
நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?
அஞ்சும்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்!
கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால்.
நன்று மன்னன் கருணை எனா நகும்;
நின்ற மைந்தனை நோக்கி, நெடுஞ் சுரத்து
என்று போவது? எனா எழும்; இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே.
அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
என் பிழைத்தனை? என்று, நின்று ஏங்குமால்-
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,
பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே.
அறம் எனக்கு இலையோ? என்னும்; ஆவிநைந்து
இற அடுத்தது என், தெய்வதங் காள்? என்னும்
பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்.
துயருற்ற கோசலையை இராமன் தேற்றி ஆறுதல் கூறுதல்
இத் திறத்தின் இடர் உறு வாள்தனைக்
கைத்தலத்தின் எடுத்து, "அருங் கற்பினோய்!
பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல் -
மெய்த்திறத்து நம் வேந்தனை, நீ" என்றான்.
பொற்பு உறுத்தன, மெய்ம்மை பொதிந்தன!
சொற்பு உறுத்தற்கு உரியன, சொல்லினான்-
கற்பு உறுத்திய கற்புடை யாள் தனை
வற்புறுத்தி, மனங்கொளத் தேற்றுவான்.
சிறந்த தம்பி திருவுற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?
விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,
அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு
ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல் என்றான்.
தன்னையும் உடன் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோசலை வேண்டுதல்
ஆகின், ஐய! அரசன் தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,
போகின், நின்னொடும் கொண்டனை போகு என்றாள்.
கோசலையின் வேண்டுதலை இராமன் மறுத்து உரைத்தல்
என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னும் கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம் என்றான்.
வரிவில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!
சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான்.
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ?
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே.
மாதவர்க்கு வழிபாடு இழைத்து, அரும்
போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி, இமையவர்
காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால்.
மகர வேலைமண் தொட்ட, வண்டு ஆடுதார்ச்
சகரர்; தாதை பணிதலை நின்று, தம்
புகரில்யாக் கையின் இன்னுயிர் போக்கிய
நிகரில் மாப்புகழ் நின்றது அன்றோ? எனா.
மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்,
தான் மறுத்திலன் தாதைசொல்; தாயையே,
ஊன் அறக்குறைத்தான்; உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ? என்றான்.
இராமன் காடு செல்வதை தடுக்க எண்ணி கோசலை தயரதனிடம் செல்லுதல்
இத் திறத்த எனைப் பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,
எத் திறத்தும் இறக்கும் இந் நாடு எனா,
மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள்.
அவனி காவல் பரதனது ஆகுக;
இவன் இஞ் ஞாலம் இறந்து, இருங் கானிடைத்
தவன் நிலாவகைக் காப்பென், தகைவினால்,
புவனி நாதன் தொழுது என்று போயினாள்.
இராமன் சுமித்திரையின் மாளிகைக்குச் செல்லுதல்
போகின்றாளைத் தொழுது, புரவலன்
ஆகம் மற்று அவள் தன்னையும் ஆற்றி, இச்
சோகம் தீர்ப்பவள் என்று, சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான்.
கைகேயின் மாளிகையில் தயரதன் நிலை கண்டு கோசலை மயங்கி விழுதல்
நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்
கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்தென்னவே.
கோசலையின் புலம்பல்
பிறியார் பிரிவு ஏது? என்னும்; பெரியோய் தகவோ! என்னும்;
நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது? என்னும்;
வறியோர் தனமே! என்னும்; தமியேன் வலியே! என்னும்;
அறிவோ; வினையோ? என்னும்; அரசே! அரசே! என்னும்.
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளைத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ,
அருளக் கருதிற்று இதுவோ? அரசர்க்கு அரசே! என்னும்.
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே!
நிரை ஆர் கலையின் கடலே! நெறி ஆர் மறையின் நிலையே!
கரையா அயர்வேன்; எனை, நீ, கருணாலயனே! "என்?" என்று
உரையா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்! என்னும்.
மின் நின்றனைய மேனி, வெறிதாய் விட நின்றது போல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்;
என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்;
மன்னன் தகைமை காண வாராய்; மகனே! என்னும்.
கோசலை புலம்பலை பிறர் சொல்லக் கேட்ட வசிட்டனின் வருகை
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம்,
ஒவ்வாது, ஒவ்வாது என்னா, ஒளிவாள் நிருபர், முனிவர்,
அவ் ஆறு அறிவாய் என்ன, வந்தான் முனிவன்; அவனும்,
வெவ் வாள் அரசன் நிலை கண்டு. என் ஆம் விளைவு? என்று உன்னா.
நிலைமையைக் கண்ட வசிட்டனின் மனக் கருத்து
இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்;
மறந்தான் உணர்வு என்று உன்னா, வன் கேகயர்கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே;
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ?.
வசிட்டனிடம் கைகேயி நிகழ்ந்தவற்றை கூறுதல்
என்னா உன்னா, முனிவன், இடரால் அழிவாள் துயரம்
சொன்னாள் ஆகாள் என்முன் தொழுகே கயர்கோன் மகளை,
அன்னாய்! உரையாய்; அரசன் அயர்வான் நிலை என்? என்ன,
தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள்.
வசிட்டன் தயரதனை தெளிவித்தல்
சொற்றாள், சொல்லாமுன்னம், சுடர்வாள் அரசர்க்கு அரசை,
பொன் - தாமரை போல் கையால், பொடி சூழ் படிநின்று எழுவி,
கற்றாய், அயரேல்; அவளே தரும், நின் காதற்கு அரசை;
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவா நின்றான்.
தயரதன் உணர்வு பெறுதல்
சீதப் பனி நீர் அளவி, திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து, இன்சொல் புகலாநின்றான்;
ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய,
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான்.
வசிட்டனின் தேறுதல் வார்த்தைகள்
காணா, ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்;
ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ?
மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல் என்றான்.
வசிட்டனிடம் தயரதன் வேண்டுகோள்
என்ற அம் முனிவன் தன்னை, நினையா வினையேன், இனி, யான்
பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து,
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என் உரையும்,
குன்றும் பழி பூணாமல், காவாய்; கோவே! என்றான்.
வசிட்டனின் அறிவுரையும் கைகேயின் மறுப்பும்
முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி,
இனி, உன் புதல்வற்கு அரசும், ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழிநின் கணவற்கு உயிரும் உதவி, வசைதீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய்; பொன்னே! என்றான்.
மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியாமுன்னம்
விம்மா அழுவாள், அரசன் மெய்யின் திரிவான் என்னில்,
இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என்சொல்
பொய்ம் மாணாமற்கு, இன்றே, பொன்றாது ஒழியேன் என்றாள்.
வசிட்டன் கைகேயியை கடிந்துரைத்தல்
கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும்,
பழி நின்று உயரும் எனவும், பாவம் உளது ஆம் எனவும்,
ஒழிகின்றிலை; அன்றியும், ஒன்று உணர்கின்றிலை; யான் இனிமேல்
மொழிகின்றன என்? என்னா, முனியும், முறை அன்று என்பான்.
கண்ணோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணாதே,
"புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ?" என்னப் புகல்வாய்;
பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே! என்றான்.
வாயால், மன்னன், மகனை, "வனம் ஏகு" என்னா முன்னம்,
நீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்
போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்
தீயோய்! நின்போல் தீயார் உளரோ? செயல் என்? என்றான்.
தயரதன் வருத்தத்துடன் கைகேயியை பழித்துக் கூறுதல்
தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன்,
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி,
பாவி! நீயே, "வெங் கான் படர்வாய்" என்று, என் உயிரை
ஏவினாயோ? அவனும் ஏகினானோ? என்றான்.
கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனிவாய் விடம், நான் நெடுநாள்
உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்;
பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன்.
விழிக்கும் கண்வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன்
கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம் என்றான்.
கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல்
இன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,
சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று
உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்.
தயரதன் நிலை கண்ட கோசலையின் துயர்நிலை
என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான்
உன்னைக் கண்டும் இலனோ? என்றான், உயர் கோசலையை;
பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம்,
தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள்.
மாற்றாள் செயல் ஆம் என்றும், கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும், அறிந்தாள்; அவளும், அவனைத்
தேற்றா நின்றாள்; மகனைத் திரிவான் என்றாள்; அரசன்
தோற்றான் மெய் என்று, உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள்.
தயரதனை கோசலை தேற்றுதல்
தள்ளா நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா வகைநின்று
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்!
விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல்
தயரதனை கோசலை தேற்றுதல்
தள்ளா நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா வகைநின்று
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்!
விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின், உலகம்
கொள்ளா தன்றோ? என்றான், கணவன் குறையக் குறைவாள்.
கோசலையின் பெருந்துயர்
போவாது ஒழியான் என்றாள், புதல்வன் தன்னைக் கணவன்
சாவாது ஒழியான் என்று என்று, உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;
காவாய் என்னாள் மகனைக் கணவன் புகழுக்கு அழிவாள்;
ஆ! ஆ! உயர்கோ சலையாம் அன்னம் என்னுற் றனளே!
இராமன் காட்டிற்கு செல்வது நினைத்து தயரதன் புலம்புதல்
உணர்வான், அனையாள் உரையால், உயர்ந்தான் உரைசால் குமரன்
புணரான் நிலமே, வனமே போவானே ஆம் என்னா; -
இணரார் தருதார் அரசன் இடரால் அயர்வான்; வினையேன்
துணைவா! துணைவா என்றான்; தோன்றால், தோன்றாய்! என்றான்.
கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்;
எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய,
மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்! என்றான்.
படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான்,
மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்!
"உடைமா மகுடம் புனை" என்று உரையா, உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ! என்றான்.
கறுத்தாய் உருவம்; மனமும் கண்ணும் கையும் செய்யாய்;
பொறுத்தாய் பொறையே; இறைவன் புரம்மூன்று எரித்த போர்வில்
இறுத்தாய், தமியேன் என்னாது, என்னை இம்மூப்பு இடையே
வெறுத்தாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்! என்றான்.
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே!
மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே!
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்;
உன்னின் முன்னம் புகுவேன், உயர்வானகம்யான் என்றான்.
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன் என்றான்.
எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும்,
பொன்-தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே உன்னைப்
பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்! என்றான்.
அள்ளற் பள்ளம் புனல்சூழ் அகல்மா நிலமும், அரசும்,
கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலாம் எவையும்
கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்! என்றான்.
ஒலியார் கடல்சூழ் உலகத்து, உயர்வான் இடை, நா கரினும்
பொலியா நின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே!
வலியார் உடையார்? என்றான்; மழுவாள் உடையான் வரவும்,
சலியா நிலையாய் என்றால், தடுப்பார் உளரோ?" என்றான்.
கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ, வன்கண் என்கண்? மைந்தா!
காட்டே உறைவாய் நீ! இக் கைகேசியையும் கண்டு, இந்
நாட்டே உறைவேன் என்றால், நன்று என் நன்மை! என்றான்.
"மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும்,
உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன்,
ஐயா! கைகேசியை நேராகேனோ நான்? என்றான்.
பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்?
புலம்பும் தயரதனை வசிட்டன் தேற்றுதல்
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், உயிரும்
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தித் தேய்த்தான்,
மென் தோல் மார்பின் முனிவன், வேந்தே! அயரேல்; அவனை,
இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு என்னா.
வசிட்டன் மொழி கேட்டு தயரதன் சிறிது தெளிதல்
முனிவன் சொல்லும் அளவில், முடியும்கொல்? என்று, அரசன்
தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்; இந்தப்
புனிதன் போனால், இவனால் போகாது ஒழிவான் என்னா,
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான்.
தயரதன் நிலை கண்டு கோசலை வருந்துதல்
மறந்தான் நினைவும் உயிரும், மன்னன் என்னா மறுகா,
இறந்தான் கொல்லோ அரசன்? என்னை இடருற்று அழிவாள்,
துறந்தான் மகன் முன் எனையும்; துறந்தாய் நீயும்; துணைவா!
அறம் தான் இதுவோ? ஐயா! அரசர்க்கு அரசே! என்றாள்.
தயரதனை கோசலை தேற்றுதல்
மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!
உய்யும் வகைநின் உயிரை ஒம்பாது இங்ஙன் தேம்பின்,
வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவன் உடன்நம்
ஐயன் வரினும் வருமால்; அயரேல்; அரசே! என்றாள்.
இராமன் வருவானா எனத் தயரதன் கோசலையிடம் கேட்டு வருந்துதல்
என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகனும்,
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை,
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள,
வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே? என்றான்.
தயரதன் கைகேயின் கொடுமையைக் கூறி வருந்துதல்
வன் மாயக் கைகேசி வரத்தால், என்றன் உயிரை
முன்மாய் விப்பத் துணிந்தாளேனும் கூனி மொழியால்,
தன்மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என்மா மகனைக் "கான் ஏகு" என்றாள்; என்றாள்; என்றான்.
தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்
பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான்.
வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன்.
ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியொன்று இலவாய் நயனம்
திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள.
புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா,
மக்கள்-குரல் என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால்.
கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
"ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க" என்று அயரப்
பொய்யொன்று அறியா மைந்தன், "கேள் நீ" என்னப் புகல்வான்.
"இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!" என்றே.
"உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான் எனவும், அவர்பால் விளம்பு" என்று,
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால்.
மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, "ஐயா, இதுபோது அளவு ஆய்
வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா" எனவே.
கம்ப ராமாயணம் - இராமன் வனம் செல்லுதல்
"ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்.
"வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, நீ யார்? என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே.
"அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!" என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன்.
"வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; "விழி போயிற்று, இன்று" என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; "ஐயா! ஐயா!" என்றார்;
"போழ்ந்தாய் நெஞ்சை" என்றார்; "பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே."
"என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, "யானே
இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்" என்று இடலும்,
"வண் திண் சீலையாய்! கேண்மோ" எனவே, ஒரு சொல் வகுத்தான்.
"கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரியப்
பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்" என்னா.
"தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது, நின் சரணம்,
காவாய் என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
போவாய், அகல்வான்" என்னா, பொன் நாட்டிடைப் போயினரால்.
"சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், "இன் சொல்
மைந்தன் உளன் என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,
எம் தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா என்றான்.
வசிட்டன் அரசவை சேர்தல்
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்,
புரைசை மத களிற்றான் பொற் கோயில் முன்னர்,
முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு
அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான்.
செய்தியை தெரிவிக்குமாறு அரசர்கள் வசிட்டனை வேண்டுதல்
வந்த முனியை முகம் நோக்கி வாள்வேந்தர்,
எந்தை! புகுந்த இடையூறு உண்டாயதோ?
அந்தமில் சோகத்து அழுத குரல் தான் என்ன?
சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது என்று உரைத்தார்.
முடிசூட்டு விழா தடைபட்டதை வசிட்டன் உரைத்தல்
கொண்டாள் வரம் இரண்டு, கேகயர்கோன் கொம்பு; அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும் தானளித்தான்;
ஒண்தார் முகிலை வனம்போகு என்று ஒருப்படுத்தாள்;
எண்தானும் வேறில்லை; ஈது அடுத்தவாறு என்றான்.
வேந்தன் பணியினால், கைகேசி மெய்ப் புதல்வன்,
பாந்தள்மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்;
ஏந்து தடந் தோள் இராமன், திரு மடந்தை
காந்தன், ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான்.
இராமன் காடு செல்வது பற்றி கேட்டோரின் துன்ப நிலை
வாரார் முலையாரும், மற்றுள்ள மாந்தர்களும்,
ஆறாத காதல் அரசர்களும், அந்தணரும்,
பேராத வாய்மைப் பெரியோன் உரைசெவியில்
சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார்.
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப,
மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,
கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே,
விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை.
மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தித் தம்
கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப,
பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -
ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார்.
ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம் என்பார்;
காவா, அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்;
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
மா வாதம் சாய்த்த மராமரம் போல்கின்றார்.
கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?-
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்.
சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம்
மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக,
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார்.
ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே.
ஞானீயும் உய்கலான் என்னாதே, நாயகனைக்
கானீயும் என்றுரைத்த கைகேசியுங், கொடிய
கூனீயும் அல்லால், கொடியார் பிறருளரோ?
மேனீயும் இன்றி வெறுநீரே ஆயினார்.
ஊர் மக்களின் துயரம்
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்?
தேர் ஓட நீறு ஆகி, சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்,
ஆறு ஆகி ஓடின கண்ணீர்;
அரு நெஞ்சம் கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே.
நகரத்தவரின் வருத்தம்
மண் செய்த பாவம் உளது என்பார்;
மா மலர்மேல் பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்;
புண் செய்த நெஞ்சை, விதி என்பார்;
பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார்.
ஆளான் பரதன் அரசு என்பார்;
ஐயன், இனி மீளான்; நமக்கு விதிகொடிதே காண் என்பார்;
கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான் என்பார்;
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்? என்பார்.
ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல் காதல் முதிர,
கருத்து அழிந்தான் ஆம் என்பார்;
சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம் போதும்;
அது அன்றேல், புகுதும் எரி என்பார்.
கண்ணீர் மெழுகுவார் உய்யாள் போல் கோசலை என்று,
ஓவாது வெய்து உயிர்ப்பார்;
ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ என்பார்;
நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார்.
என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்; நின்றனன்,
நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது,
கொற்றவன் பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்.
ஊர் மக்களின் துயரம்
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்? தேர் ஓட
நீறு ஆகி, சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்,
ஆறு ஆகி ஓடின கண்ணீர்; அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே.
நகரத்தவரின் வருத்தம்
மண் செய்த பாவம் உளது என்பார்; மா மலர்மேல்
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்;
புண் செய்த நெஞ்சை, விதி என்பார்; பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார்.
ஆளான் பரதன் அரசு என்பார்; ஐயன், இனி
மீளான்; நமக்கு விதிகொடிதே காண் என்பார்;
கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான் என்பார்;
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்? என்பார்.
ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல்
காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம் என்பார்;
சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம்
போதும்; அது அன்றேல், புகுதும் எரி என்பார்.
என்னே நிருபன் இயற்கை இருந்தவா!
தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்? என்பார்.
இலக்குவனின் கோபம்
கேட்டான் இளையோன்; கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள்; அளித்தாள் வனம் தம் முனை, வெம்மை முற்றித்
தீட்டாத வேல் கண் சிறுதாய் என யாவராலும்
மூட்டாத காலக் கடைத்தீயென மூண்டு எழுந்தான்.
இலக்குவனின் ஆவேச உரை
புவிப்பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்ட முற்றக்
குவிப்பானும், இன்றே என கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன் இதுகாக்குநர் காமின் என்றான்.
இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்
ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?
இராமனின் சமாதான உரை
நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்? என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்.
வசிட்ட முனிவனின் வருகை
அவ்வயின், அரசவை நின்றும், அன்பினன்
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
கவ்வையம் பெருங்கடல் முனியும் கால்வைத்தான்.
இராமனின் விளக்க உரை
ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ? என்றான் -
தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான்.
மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்;
சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா,
போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார்.
இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்
தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
ஆதி மன்னனை ஆற்றுமின் நீர் என்றான்;
மாதராரும் விழுந்து மயங்கினார்.
தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்
ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
காத்து நல்குமின், தெய்வதங்காள்! என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.
வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்
அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான்.
விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, என் நாயகனே! துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது செப்புதி நீ எனா,
அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள்.
அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின் மயங்கி, மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்? என்றே இரங்கி மொழிவான்:
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ?- துணைவா! என்றாள்; துயரேல்! துயரேல்! என்றான்
சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-
மேலா கியநான் முகனால், வேதங் களின் மா முறையின்-
பாலா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்,
நாலா கியதாம் வருணன் தனின், முன் எமை நல்கினனால்.
"அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய்ப் புதல்வன்,
நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் எனச்
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்" என்றான்.
தாவாத அருந்தவர் சொல் தவறாததனால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு என்றே
ஓவாதார் முன் நின்றே; ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள் பொன்றி, பொன் - நாடு அதனில் புக்கார்.
இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில், அச்
செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்,
மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெஞ் சினனாய்.
என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்:
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன், சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-
தாய், நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி! என்றாள்.
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன், உலகம் யாவையும்,
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை? என்றார் சிலர்.
போயினான் நகர் நீங்கி-பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான்.