திருக்கைமீன்
திருக்கைமீன்
மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை.
இவற்றின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும்.
வால் உடலைவிட நீளமாக இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.
உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடும்.
இவ்விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சி தரும் (நீண்மையுடைய) குருத்தெலும்பு கொண்டது.
இவற்றுள் சில மின்சாரம் பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லவை.
