செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே

bookmark

என்னில் எழுந்து வா என்னை ஆள வா
முகிலாக மழையாக மழை தந்த வளமாக
மனமெங்கும் மணந்து வா என் உயிரோடு கலந்து வா

1. இளங்காலை வானம் குயில் பாடும் கானம்
இவை காணும் நெஞ்சம் உன்பாதம் தஞ்சம் (2)
இமை மூடினும் உனைத் தேடிடும் விழியொன்று தா - 2

2. வாழ்வில் நீ தந்த வசந்தங்கள் கோடி
வாழ்வே நீ என்றும் உன் அன்பைப் பாடி (2)
உயிர் நீங்கிடும் உனை நாடிடும் உறவொன்று தா - 2