சிலந்தி
சிலந்தி
இவற்றின் இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள "hemocyanin" எனும் காப்பர்.
இவற்றிற்க்கு ஆணுறுப்பு இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.
இவை தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது.
சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம்
இவை தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து சென்று நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.
இதன் விஷப்பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது.
வலை பின்னுவது, அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தான். இதற்கு முக்கிய காரணம் உண்டு; இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்க இந்த நேரத்தில் மட்டுமே வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
வயிற்றின் அடியில், இரண்டு சுரப்பிகள் உள்ளன; இவை சுரக்கும் திரவத்தால் தான், வலை பின்னுகிறது. இந்த திரவத்தின் மீது காற்று பட்டவுடன், மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது.
சிலந்திநூல் மிகவும் மெலிதாக இருந்தாலும், அதன் அளவை ஒப்பிடும்பொழுது அது மிகுந்த வலிமையும், மிகுந்த நீட்சித்திறனும் கொண்டது .
இரண்டு சுப்பிரகளிலிருந்து வெளியேறும் திரவம் வெவ்வேறு தன்மை உடையவை. ஒரு சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தினால் அமைந்த வலையில் பூச்சிகள் விழுந்தால் ஒட்டிக் கொள்ளும்; இன்னொன்றில் ஒட்டிக் கொள்ளாது.
இதனால் தான், பூச்சிகள் விழுந்ததும் தத்தளிக்கின்றன. விழுந்த இரை மீது விஷத்தைப் பாய்ச்சி கொன்று விடும் சிலந்தி.
