சட்டம் ஒரு இருட்டறை

bookmark

"நடிகைகள் ஏன் அடிக்கடி விவாகரத்து பண்றாங்க?"

அடிக்கடி கலியாண சீன்லே நடிக்கிறாங்க இல்லையா?"

"கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு.."

"ஏன்...?"

"ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா."

"இவருகிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?"

"லைபாய் சோப் ஏஜெண்ட்!"

"இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?"

"சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலதான்"

ஒருவன்: "பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?"

மற்றவன்: "இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."