காகம்

காகம்

bookmark

காகம்

பறவை இனங்களிலேயே கூடுதலான அறிவுத் திறன்கொண்ட பறவை

இதன் தடிப்பான அலகு கடினமான எந்தப் பொருளையும் உடைத்து உண்ண இலகுவாக இருக்கின்றது. 

கருமை நிற அடர்த்தியான உடல் மயிர்களும் சிறகுகளும் அவற்றுக்கு குளிர், வெப்ப காலங்களில் தகுந்த போர்வையாக அமைகின்றன. 

வால் பகுதி அவசர அவசரமாகத் திகைகளை மாற்றி மாற்றிப் பறப்பதற்கு உதவுகின்றன.

இவை கூட்டமாக வாழும் பறவை இனம். அவை எப்போதும் தனித்துச் செல்வதில்லை. ஒரு கூட்டத்தில் 10 முதல் 30 வரையான காகங்கள் இருக்கும். 

இது ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. தனது ஜோடியுடன் மட்டுமே இனம் சேறும.

ஆண், பெண் ஜோடி சேர்ந்தால் இறுதிவரை பிரியாமல் இருக்கும். 

கூச்ச சுபாவம் கொண்டது. மற்ற பறவைகள் மிருகங்கள் போலல்லாமல் இவை மறைவாகவே இனப்பெருக்கத்தில் இணையும். 

பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது.

உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை! உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும்